ஆளுநரைச் சந்தித்தார் காளிமுத்து
Subscribe to Oneindia Tamil
சென்னை:
ஆளுநர் ராம் மோகன் ராவை நேரில் சந்தித்து சட்டசபைக் கூட்டத் தொடரை துவக்கி வைக்குமாறு நேரில் அழைப்புவிடுத்தார் சபாநாயகர் காளிமுத்து.
தமிழக சட்டசபைக் கூட்டத் தொடர் ஆளுநர் உரையுடன் சனிக்கிழமை காலை தொடங்குகிறது.
இதற்காக ஆளுநருக்கு நேரடியாக அழைப்பு அனுப்ப சபாநாயகர் காளிமுத்து மற்றும் சட்டசபை செயலாளர்ஜானகிராமன் இருவரும் ஆளுநர் மாளிகைக்கு வெள்ளிக்கிழமை சென்றனர்.
அங்கு ஆளுநரைச் சந்தித்து சட்டசபைக் கூட்டத் தொடர் குறித்து இருவரும் பேசினர். பின்னர் அதிகாரப்பூர்வமாகஆளுநருக்கு காளிமுத்து அழைப்பு விடுத்தார்.












Click it and Unblock the Notifications