கார் அதிபரை சாக்கில் கட்டிக் கொண்டு வந்த அல்-உம்மா தீவிரவாதிகள்
மதுரை:
மதுரை அருகே 2 அல்-உம்மா தீவிரவாதிகள் தப்பிய சம்பவத்தில், டாடா சுமோ காருக்கு உள்ளேயே கார் அதிபரைசாக்கில் கட்டி போட்டு கொண்டு தீவிரவாதிகள் வந்தது பற்றி புதிய தகவல் கிடைத்துள்ளது.
அல்-உம்மா தீவிரவாதிகளான இமாம் அலி, ஹைதர் அலி ஆகியோரை மதுரை அருகே உள்ள திருமங்கலம்போலீஸ் நிலையத்தில் இருந்து 6 பேர் மீட்டு சென்றனர். அவர்களை பிடிக்க தமிழகம் முழுவதும் போலீசார் உஷார்படுத்தப்பட்டனர்.
இந்நிலையில் 2 தினங்களுக்கு முன்பு ஹைதர் அலியை சிவகங்கையில் வைத்து போலீசார் கைது செய்தனர்.கைதிகளை மீட்ட 6 பேர் வந்த சுமோ கார் அதிபரான ஹென்றி பீட்டரை பிடித்து விசாரித்ததில், மதுரை அருகேதன்னை துப்பாக்கி காட்டி மிரட்டி வெளியே தள்ளி விட்டு காரை கடத்தி சென்றதாக முதலில் வாக்குமூலம் கூறினார்.
ஆனால் தற்போது வேறு மாதிரி கூறி வருகிறார். தற்போது அவர் போலீஸிடம் கூறியதாவது:
கடந்த 6ம் தேதி 4 பேர் சென்னைக்கு செல்ல வேண்டும் என்று சொல்லி காரை வாடகைக்கு எடுத்தனர். கோர்ட்அருகே கார் வந்த போது மேலும் 2 பேர் ஏறினார்கள். காரை திருச்சிக்கு ஓட்டும் படி கூறினர். கார் துவரங்குறிச்சிஅருகே வந்த போது காரை நிறுத்த சொன்னார்கள்.
நான் காரை நிறுத்தியவுடன் துப்பாக்கியை காட்டி மிரட்டினர். பின்னர் ஒரு சாக்கில் கட்டி காருக்குள் போட்டனர்.மூச்சு விடுவதற்காக சாக்கில் இரண்டு துவாரங்களும் போட்டனர். சத்தம் போட்டால் கொன்று விடுவதாக மிரட்டினர்.
பின்பு காரை திருப்பிக் கொண்டு மீண்டும் மதுரை கோர்ட்டுக்கு வந்தனர். போலீஸ் வேனை பின் தொடர்ந்துதிருமங்கலத்தில் கைதிகளை மீட்டனர். பிறகு ரிங் ரோட்டில் கார் சென்றது.
அப்போது வழியில் காரை நிறுத்தி சாக்குப்பையில் இருந்த என்னை தள்ளி விட்டனர். சாக்கில் இருந்த நான் சத்தம்போட்டதும் அந்த வழியாக சென்றவர்கள் சாக்கை அவிழ்த்து விட்டனர் என்று ஹென்றி பீட்டர் கூறியுள்ளார்.
முன்னுக்கு முரணாக பேசி வரும் அவர் சொல்வது உண்மையா என்பது குறித்தும் தீவிரவாதிகள் அவருக்குஅறிமுகமானவர்களா என்பது குறித்தும் போலீசார் தீவிரமாக அவரிடம் விசாரித்து வருகின்றனர்.
இமாம் அலி குடும்பத்தினரிடம் விசாரணை:
இதற்கிடையே தப்பிச் சென்ற இன்னொரு கைதியான இமாம் அலியின் தாயார், அக்காவிடம் போலீசார் விசாரணைநடத்தி வருகின்றனர்.
இமாம் அலியின் தாயார் மும்தாஜ் (50), அக்கா கலிதா (35). இவர்கள் மதுரையில் உள்ள கோமதிபுரத்தில் வசித்துவருகின்றனர்.
கடந்த 1992ல் ஒரு குண்டு வெடிப்பு சம்பந்தமாக இமாம் அலியை போலீசார் தேடி வந்த போது, பெங்களூரில்இருந்து தாயாருக்கு அவன் எழுதிய கடிதத்தை வைத்து போலீசார் அவனை பெங்களூரில் கைது செய்தனர்.
பெங்களூரில் இருக்கும் போதே கடிதம் எழுதிய இமாம் அலி, தற்போது மதுரையில் பதுங்கியிருக்கும் போதுகண்டிப்பாக தனது குடும்பத்தினருடன் தொடர்பு கொண்டிருப்பான் என்று போலீசார் கருதினர்.
எனவே அவனுடைய தாயார், அக்காவை போலீசார் பிடித்து ரகசிய இடத்திற்கு சென்று விசாரணை நடத்திவருகின்றனர். அதே போல் இரண்டு கைதிகளையும் மீட்ட 6 தீவிரவாதிகளின் குடும்பத்தினர் மற்றும்உறவினர்களிடமும் போலீசார் விசாரித்து வருகின்றனர்.
இந்த விசாரணையில் முக்கிய துப்பு கிடைத்துள்ளதாக தெரிகிறது. அதன் அடிப்படையில் போலீசார் தங்கள் தேடுதல்வேட்டையை தீவிரப்படுத்தியுள்ளனர்.
-
இந்தா ஆரம்பிச்சுட்டாங்கல்ல.. திருச்சி இடை தேர்தலில் திமுகவில் சீட் யாருக்கு! ரேசில் அன்பில் - இனிகோ! -
தவெகவின் முதல் ராஜ்யசபா எம்.பி யார்? 4 பேரில் ஒருவர் பெயரை 'டிக்' அடிக்க ரெடியாகும் விஜய்! -
20 நிமிடம்.. அஜித்குமார் தாயாருக்கு முதல்வர் விஜய் நேரில் அஞ்சலி.. சென்னை வீட்டுக்கு சென்று ஆறுதல் -
"விஜய்" பெயரை யாரும் சொல்லக் கூடாது.. வார்த்தையைவிட்ட துணை சபாநாயகர்.. பத்திரிகையாளர் சொன்ன பதில்! -
திமுகவை தோற்கடித்த 8 அதிர்ச்சி காரணங்கள்.. ஸ்டாலின் மேஜைக்கு போன இறுதி ரிப்போர்ட்.. உள்ளே ஷாக்! -
ஓரம் கட்டப்பட்ட சித்தராமையா.. ஆட்சி அமைக்க டி.கே.சிவகுமாருக்கு ஆளுநர் அழைப்பு! ஆட்டம் ஆரம்பம் -
விஜய் என் வீடு தேடி வந்து எனக்கு துணை முதல்வர் பதவி கொடுத்திருப்பார்! பிரேமலதா பரபரப்பு தகவல் -
என்னை தொட்டிருக்கவே கூடாது.. கோவையில் வேலுமணிக்கு தண்ணி காட்டும் எடப்பாடி.. அடித்து ஆடும் வேலுசாமி -
விஜய்-ஐ அடித்து மேலே வந்த சிவக்குமார்.. லீமா ரோஸ் கொடுத்த ஷாக்! -
கொஞ்சம் அவகாசம் கொடுங்க.. எங்களுக்கு ஓட்டு போட்டதற்கு பெருமையடைய வைப்போம்.. அமைச்சர் ரமேஷ் -
ஒரு 'நாளுக்கு' ரூ.22.63 லட்சம் சம்பளம் வாங்கும் இன்போசிஸ் ஊழியர்.. யாருப்பா அது! -
திருமணம் முதல் அஜித் தாயார் அஞ்சலி வரை! சுப, துக்க நிகழ்வுகளில் மட்டும் விஜய்யுடன் வருகிறாரா த்ரிஷா?












Click it and Unblock the Notifications