கிரையோஜெனிக் 3வது கட்ட சோதனையும் வெற்றி
Subscribe to Oneindia Tamil
நாகர்கோவில்:
மகேந்திரகிரி திரவ இயக்க திட்ட மையத்தில் நடைபெற்ற கிரையோஜெனிக் என்ஜினின் 3வது கட்ட சோதனைவெற்றி பெற்றது.
நாகர்கோவில் அருகே மகேந்திரிகிரியில் இந்திய விண்வெளி ஆராய்ச்சி நிறுவனம் உள்ளது. இந்த மையத்தில் திரவநிலையிலான ராக்கெட் என்ஜின்கள் சோதனை செய்யப்பட்டு வருகின்றன.
தற்போது இங்கே கிரையோஜெனிக் என்ஜின் வடிவமைக்கப்பட்டு வருகிறது. இந்த ராக்கெட் என்ஜின் ஏற்கனவே 2முறை வெற்றிகரமாகப் பரிசோதிக்கப்பட்டு விட்டது.
இந்நிலையில் இங்கு 3வது கட்ட சோதனை சனிக்கிழமை மாலை நடைபெற்றது. 40 வினாடிகள் நடைபெற்ற இந்தசோதனை வெற்றி பெற்றது.
இனி வருங்காலத்தில் செயற்கைக் கோள்களை செலுத்தும் வாகனத்திற்கு கிரையோஜெனிக் என்ஜின்பயன்படுத்தப்படும் என்றும், இதன் மூலம் செயற்கைகோள்களை விண்ணில் அதிக தூரத்தில் நிலை நிறுத்த முடியும்என்றும் விஞ்ஞானிகள் கூறினர்.












Click it and Unblock the Notifications