"செக்ஸ்" பிரவுசிங்கைத் தடுக்க இன்டர்நெட் மையங்களுக்கு புதிய கட்டுப்பாடு
சென்னை:
இன்டர்நெட் மூலம் ஆபாசப் படங்களைப் பார்ப்பதைத் தடுப்பதற்காக இன்டர்நெட் மையங்களைவைத்திருப்பவர்களுக்கு புதிய கட்டுப்பாடுகளை போலீசார் விதித்துள்ளனர்.
நவீன தகவல் தொடர்பு சாதனங்களில் ஒன்று இன்டர்நெட். இந்த வசதி மூலம் நாம் எங்கிருந்தாலும் உலகின் மற்றபகுதிகளுக்கு தொடர்பு கொண்டு தகவல்களை பெற முடியும், அனுப்ப முடியும்.
ஆனால் டாக்டர் பிரகாஷ் போல் சிலர் இந்த இன்டர்நெட் வசதியை பயன்படுத்தி ஆபாசப்படங்களை உலாவவிடுகின்றனர். இதனால் இளைய சமுதாயம் சீரழிவதற்கு வாய்ப்பு உள்ளது.
மேலும் சிலர் பிரபலங்கள் மற்றும் அரசியல்வாதிகளுக்கு கொலை மிரட்டல் விடுகின்றனர். இன்டர்நெட்தொடர்பான குற்றங்கள் பெரும்பாலும் இன்டர்நெட் மையங்களை பயன்படுத்தியே நடக்கிறது.
இதனால் இன்டர்நெட் மையங்களுக்கு போலீசார் புதிய கட்டுப்பாடுகளை விதித்துள்ளனர். அதன் விவரங்கள்:
இன்டர்நெட் மையங்களுக்கு வருபவர்கள் கண்டிப்பாக தங்கள் பெயர், முகவரி போன்ற விவரங்களை தெரிவிக்கவேண்டும். இந்த விபரங்களை தெரிவிப்பவர்களை மட்டுமே இன்டர்நெட் மையத்தில் அனுமதிக்க வேண்டும்.
இன்டர்நெட் மையங்களில் வெளிச்சம் இருக்கும் அளவுக்கு விளக்கு பொருத்தப்பட வேண்டும். அரைகுறைவெளிச்சத்தில் தனித்தனி அறைகளில் அமர்ந்து இன்டர்நெட் வசதியை பயன்படுத்த அனுமதிக்கக் கூடாது.
இன்டர்நெட் மையங்களை பயன்படுத்துபவர்கள் ஆபாச தளங்களுக்கு சென்று பார்க்கும் இணைப்பு வசதியைதுண்டிக்க வேண்டும்.
ஒவ்வொரு இன்டர்நெட் மையங்களும் தங்கள் மையத்திற்கு வந்து இன்டர்நெட் வசதியை பயன்படுத்துபவர்கள்பற்றிய விவரங்களை அருகில் உள்ள காவல் நிலையத்திற்கு தெரியப்படுத்த வேண்டும்.
இது போன்ற கட்டுப்பாடுகளை இன்டர்நெட் மையங்களுக்கு தமிழக போலீசார் உத்தரவு பிறப்பித்துள்ளனர்.
-
டோட்டலாக தனிமைப்படுத்தப்பட்ட திமுக! உச்சக்கட்ட ஹேப்பியில் பாஜக.. தவெக விஜய் அரசுக்கு சிக்கலா? -
மோடி, நிர்மலா சீதாராமன் சந்திப்பின்போது.. கூடவே போன ஜோசியர்! சலசலப்பை கிளப்பிய விஜய்! -
97 ரன்களில் அவுட்.. ஒட்டுமொத்த மைதானமும் சோகம்.. உலக சாதனையை தவறவிட்ட வைபவ் சூர்யவன்ஷி! -
முதல்வர் விஜய்யை சந்திக்க நேரம் ஒதுக்காத அமித் ஷா.. என்ன நடந்தது? -
பிரதமர் மோடிக்கு நன்றி சொன்ன முதல்வர் விஜய்.. அதைவிட முக்கியம் 4 மேஜர் கோரிக்கைகள் -
"ஆர்.எஸ்.எஸ் பேரப்பிள்ளையாக மாறிய விசிக".. திருமா மீது பொன்.ராதாகிருஷ்ணன் கடும் தாக்கு! -
நிர்மலா சீதாராமனும் விஜய் கிட்ட அதையே சொல்வாரோ? 118 மேஜிக் நம்பர்.. தவெகவை அசைக்க முடியாத பின்னணி? -
ஒரே சீசனில் 61 சிக்ஸ்.. கெய்ல் சாதனையை 15 வயது சிறுவன் முடிச்சிட்டான்! தெறிக்கவிட்ட வைபவ் சூர்யவன்ஷி -
குதிரை பேரமா? எடப்பாடி பழனிசாமிதான் அதை செய்தார்! ஒரே போடாக போட்ட அமைச்சர் அருண்ராஜ் -
தமிழக அரசின் அதிரடி அறிவிப்பு! நுகர்வோருக்கு வந்த புதிய வசதி.. வெளியானது முக்கிய அப்டேட் -
“போலீஸ் என்றால் சிரிக்க கூடாதா? இதில் என்ன பிரச்சனை?” அமைச்சர் வன்னி அரசு சரமாரி கேள்வி! -
ரயிலில் உங்க சீட்டில் வேறு யாரேனும் இருந்தால் ரூ.20,000 இழப்பீடு? இந்த உத்தரவு பற்றி தெரியுமா












Click it and Unblock the Notifications