நெய்வேலியில் பொறியாளர்கள் ஸ்டிரைக்: தமிழகம் இருளில் மூழ்கும் அபாயம்
நெய்வேலி:
நெய்வேலி அனல்மின் நிலைய (என்.எல்.சி.) பொறியாளர்கள் மற்றும் அதிகாரிகள் ஒட்டுமொத்த விடுப்புபோராட்டத்தை மேற்கொண்டிருப்பதையடுத்து, மின் உற்பத்தி பாதிக்கப்படும் என்று தெரிகிறது.
அனல்மின் நிலையத்தை தனியார் மயமாக்கலை எதிர்த்தும், பதவி உயர்வு ஒப்பந்தத்தை நிறைவேற்றக் கோரியும்,என்.எல்.சி. பங்குகள் விற்கப்படுவதைக் கண்டித்தும் சுமார் 5,000 பொறியாளர்களும் 1,000 அதிகாரிகளும் இந்தவிடுப்புப் போராட்டத்தில் இறங்கியுள்ளனர்.
இதனால் என்.எல்.சியின் 2 மின் உற்பத்தி நிலையங்களிலும் இன்று இரவுக்குள் மின் உற்பத்தி முழுவதுமாகக்குறைந்துவிடும் என்று கருதப்படுகிறது.
என்.எல்.சி. பொறியாளர்களும் அதிகாரிகளும் தங்கள் போராட்டத்தைத் தொடர்ந்தால் மின் உற்பத்திமுழுவதுமாகப் பாதிக்கப்பட்டு, தமிழகமே இருளில் மூழ்கும் அபாயமும் ஏற்பட்டுள்ளது.
இதற்கிடையே என்.எல்.சி. பொறியாளர்களும் அதிகாரிகளும் இன்று (திங்கள்கிழமை) உண்ணாவிரதப்போராட்டத்தில் ஈடுபட்டுள்ளனர்.
இந்நிலையில் நெய்வேலியில் உள்ள என்.எல்.சிக்குச் சொந்தமான கடைகளின் வாடகையை அதிகரிக்கஅந்நிறுவனம் முடிவு செய்திருப்பதைக் கண்டித்து, அந்நகரில் உள்ள கடை மற்றும் ஓட்டல் உரிமையாளர்கள் இன்றுகடையடைப்புப் போராட்டம் நடத்துகின்றனர்.
-
இந்தா ஆரம்பிச்சுட்டாங்கல்ல.. திருச்சி இடை தேர்தலில் திமுகவில் சீட் யாருக்கு! ரேசில் அன்பில் - இனிகோ! -
தவெகவின் முதல் ராஜ்யசபா எம்.பி யார்? 4 பேரில் ஒருவர் பெயரை 'டிக்' அடிக்க ரெடியாகும் விஜய்! -
20 நிமிடம்.. அஜித்குமார் தாயாருக்கு முதல்வர் விஜய் நேரில் அஞ்சலி.. சென்னை வீட்டுக்கு சென்று ஆறுதல் -
"விஜய்" பெயரை யாரும் சொல்லக் கூடாது.. வார்த்தையைவிட்ட துணை சபாநாயகர்.. பத்திரிகையாளர் சொன்ன பதில்! -
திமுகவை தோற்கடித்த 8 அதிர்ச்சி காரணங்கள்.. ஸ்டாலின் மேஜைக்கு போன இறுதி ரிப்போர்ட்.. உள்ளே ஷாக்! -
ஓரம் கட்டப்பட்ட சித்தராமையா.. ஆட்சி அமைக்க டி.கே.சிவகுமாருக்கு ஆளுநர் அழைப்பு! ஆட்டம் ஆரம்பம் -
விஜய் என் வீடு தேடி வந்து எனக்கு துணை முதல்வர் பதவி கொடுத்திருப்பார்! பிரேமலதா பரபரப்பு தகவல் -
என்னை தொட்டிருக்கவே கூடாது.. கோவையில் வேலுமணிக்கு தண்ணி காட்டும் எடப்பாடி.. அடித்து ஆடும் வேலுசாமி -
விஜய்-ஐ அடித்து மேலே வந்த சிவக்குமார்.. லீமா ரோஸ் கொடுத்த ஷாக்! -
கொஞ்சம் அவகாசம் கொடுங்க.. எங்களுக்கு ஓட்டு போட்டதற்கு பெருமையடைய வைப்போம்.. அமைச்சர் ரமேஷ் -
ஒரு 'நாளுக்கு' ரூ.22.63 லட்சம் சம்பளம் வாங்கும் இன்போசிஸ் ஊழியர்.. யாருப்பா அது! -
திருமணம் முதல் அஜித் தாயார் அஞ்சலி வரை! சுப, துக்க நிகழ்வுகளில் மட்டும் விஜய்யுடன் வருகிறாரா த்ரிஷா?












Click it and Unblock the Notifications