அதிமுகவில் விஜயகாந்த் சேருவார் - ராதாரவி தகவல்

Subscribe to Oneindia Tamil

கடலூர்:

நடிகர் சங்கத் தலைவரான விஜயகாந்த் விரைவில் அதிமுகவில் சேருவார் என்று நடிகர் ராதாரவி நம்பிக்கைதெரிவித்துள்ளார்.

கடலூர் மாவட்ட ஜெயலலிதா பேரவையின் சார்பில் ஜெயலலிதா பிறந்த நாள் விழா பொதுக்கூட்டம் பண்ருட்டிகும்பகோணம் ரோட்டில் சனிக்கிழமை இரவு நடந்தது. இந்த விழாவில் சிறப்பு விருந்தினராக கலந்து கொண்டராதாரவி பேசியதாவது:

நடிகர்கள் அனைவரும் அதிமுகவின் பக்கம்தான் இருக்கிறார்கள். விரைவில் நடிகர் விஜயகாந்தும் அதிமுகவில்சேருவார்.

ஜெயலலிதா ஒரு சாதாரண பெண்மணி அல்ல. அவர் இந்திய பிரதமர் ஆவதற்கு தகுதி உடையவர். எம்.ஜி.ஆர்.,ஜெயலலிதா பிறந்த நாள் விழாக்களில் அதிமுகவினர் எல்லாம் ஏழைகளுக்கு பல உதவிகள் செய்து மகிழ்ச்சிஅடைகிறார்கள்.

ஆனால் கருணாநிதி பிறந்த நாளில் அவருக்கு எடைக்கு எடை பணம், வெள்ளி கட்டிகள் அவரது கட்சியினரால்வழங்கப்படுகிறது. திமுகவுக்கு இனி இறக்கும் காலம்.

நானும், எஸ்.எஸ்.சந்திரனும் திமுகவில் உண்டு இருந்தவர்கள் என்று கருணாநிதி கூறியுள்ளார். உண்டு இருந்தால்நாங்கள் ஏன் வெளியே வந்திருக்கிறோம்.

கருணாநிதி தான் சிறு வயதிலேயே எனது தந்தையின் நாடகக் கம்பெனியில் உண்டு வளர்ந்தவர்.

பாமக நிறுவனர் டாக்டர் ராமதாஸ் ஒரு அரசியல் வியாபாரி. மாம்பழம் சீசனில் தான் வரும். அது போல தான்அவரது கட்சியும் என்று ராதாரவி கூறினார்.

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+