இது எப்படி இருக்கு?: கருணாநிதி
சென்னை:
"இமாம்அலி, ஹைதர்அலி ஆகியோரை தப்பி ஓட சொல்லி விட்டு, பிறகு தனது திறமையால் அவர்களைப்பிடித்ததாக பெருமை பேசிக் கொள்ள ஜெயலலிதாவே இந்த காரியத்தை செய்திருக்கிறார். இந்த பொய் முதல்வரின்பொய்யை மிஞ்சக் கூடியதல்லவா?" என்று ஜெயலலிதாவுக்கு பதிலடி கொடுத்துள்ளார் திமுக தலைவர் கருணாநிதி.
கருணாநிதியே சில ஆட்களை விட்டு தன் அலுவலகத்தின் மீது கல்லெறிய வைத்து, எனது ஆட்சிக்கு தொல்லைகொடுக்க திட்டமிட்டுள்ளார் என்று ஜெயலலிதா சமீபத்தில் கூறியிருந்தார். இதற்கு பதிலளிக்கும் வகையில்கருணாநிதி வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது:
முதல்வர் ஜெயலலிதாவின் அறிக்கையில் சேப்பாக்கம் பகுதி திமுக செயலாளரும் நானும் திட்டமிட்டுத்தான்திமுகவிரை விட்டு அக்கட்டடத்தை தாக்கியதாகவும், அதனை அரசியல் பிரச்னையாக்க முனைந்துள்ளதாகவும்கூறியுள்ளார்.
அதே அறிக்கையில் இந்தத் தகவல் கிடைத்தவுடன், போலீஸ் கமிஷனரிடம் இந்த சம்பவம் தொடர்பாக சட்டப்படிமுறையான நடவடிக்கை எடுக்கப்படும் என்று என்னிடம் எடுத்துக் கூறச் சொன்னதாகவும் குறிப்பிட்டுள்ளார்.
ஜெயலலிதாவின் முன்னுக்கு பின் முரணான இந்த அறிக்கையே ஆரோக்கியமற்ற அரசியல் நடத்துவது யார்என்பதை மக்களுக்குப் புரிய வைக்கப் போதுமானது.
நான் ஒரு பொய் கதை சொல்லட்டுமா? இமாம் அலி, ஹைதர் அலி என்ற இரண்டு தீவிரவாதிகளை போலீஸ்பிடியில் இருந்து தப்பித்து ஓடச் சொல்லிவிட்டு, பிறகு அவர்களை தன் துணிச்சல், திறமை காரணமாக பிடித்துவிட்டதாக பெருமை பேசிக் கொள்ள முதல்வர் ஜெயலலிதாவே இந்த காரியத்தைச் செய்திருக்கிறார்.
எப்படி இந்த பொய்? முதல்வரின் பொய்யை மிஞ்சக் கூடிய பொய் அல்லவா?
அவரது அறிக்கையில் என்னை தரம் தாழ்ந்த அரசியல்வாதி, முதிர்ச்சியற்றவர், சிறு பிள்ளைத் தனம் என்றுகுறிப்பிட்டுள்ளார். நான் காஸ்ட்லியான அரசியல் பாணியை கையாளக் கற்றதும் இல்லை. பெற்றதும் இல்லை.
அதைக் கற்று இருந்தால் எத்தனையோ கட்சிகளில் இருந்து ஆட்களைப் பிடிக்கவும், கட்சிகளை உடைக்கவும், சிலகட்சிகளின் வாயை மூடவும் என்னால் முடிந்திருக்குமே.
எனவே நான் மலிவான கட்சியின் தலைவர் தான். காஸ்ட்லியான கட்சியின் முதல்வரல்லவா ஜெயலலிதா? அவர்சொல்வது அப்படியே உண்மை என்று அந்த அறிக்கையில் கருணாநிதி கூறியுள்ளார்.
-
வருங்கால இளைஞர்களுக்கு வழிவிடுங்க! அதிமுக ராஜசத்யன் திடீர் ட்வீட்! டீகோடு செய்து பார்த்தால்..! -
SP Velumani: வேலுமணிக்கு வில்லனாக மாறிய முனுசாமி.. பதவிக்கு விழுந்த வேட்டு! -
வங்கி கணக்கில் வரும் ரூ.3000.. விஜய் அனுப்பும் ஜூன் மாத தொகை.. 3 திட்டங்களில் கிடைக்கும் பணம் -
கப்பு முக்கியம் பிகிலு.. விடாபிடியாய் நிற்கும் விஜய்.. ஓசூர்-க்கு ஜாக்பாட்! -
எல்பிஜி சிலிண்டர் பயன்படுத்துபவர்களுக்கு..நாளை முதல் புதிய கட்டுப்பாடுகள்! PNGக்கு மாற்றம் கட்டாயம்? -
இந்தா ஆரம்பிச்சுட்டாங்கல்ல.. திருச்சி இடை தேர்தலில் திமுகவில் சீட் யாருக்கு! ரேசில் அன்பில் - இனிகோ! -
தவெகவின் முதல் ராஜ்யசபா எம்.பி யார்? 4 பேரில் ஒருவர் பெயரை 'டிக்' அடிக்க ரெடியாகும் விஜய்! -
20 நிமிடம்.. அஜித்குமார் தாயாருக்கு முதல்வர் விஜய் நேரில் அஞ்சலி.. சென்னை வீட்டுக்கு சென்று ஆறுதல் -
"விஜய்" பெயரை யாரும் சொல்லக் கூடாது.. வார்த்தையைவிட்ட துணை சபாநாயகர்.. பத்திரிகையாளர் சொன்ன பதில்! -
திமுகவை தோற்கடித்த 8 அதிர்ச்சி காரணங்கள்.. ஸ்டாலின் மேஜைக்கு போன இறுதி ரிப்போர்ட்.. உள்ளே ஷாக்! -
ஓரம் கட்டப்பட்ட சித்தராமையா.. ஆட்சி அமைக்க டி.கே.சிவகுமாருக்கு ஆளுநர் அழைப்பு! ஆட்டம் ஆரம்பம் -
விஜய் என் வீடு தேடி வந்து எனக்கு துணை முதல்வர் பதவி கொடுத்திருப்பார்! பிரேமலதா பரபரப்பு தகவல்












Click it and Unblock the Notifications