"நிலைக் கண்ணாடியும் ரசம் போன கண்ணாடியும்": சட்டசபையில் சுவையான விவாதம்
சென்னை:
சட்டசபையில் திமுக-அதிமுக உறுப்பினர்களுக்கிடையே சுவாரஸ்யமான விவாதம் நடந்தது.
ஆளுநர் உரைக்கு நன்றி தெரிவிக்கும் தீர்மானம் மீதான விவாதம் நேற்று (செவ்வாய்க்கிழமை) தொடங்கியது.
ஆளுங்கட்சி எம்.எல்.ஏ. ராஜரத்தினம் தீர்மானத்தை முன்மொழிந்து பேசி விவாதத்தை தொடங்கி வைத்தார்.மற்றொரு ஆளுங்கட்சி எம்.எல்.ஏ. விஜயலட்சுமி பழனிச்சாமி அதை வழி மொழிந்தார். அதன் பிறகு விவாதம்தொடங்கியது.
பெரம்பலூர் மாவட்டத்துடன், அரியலூர் மாவட்டத்தை மீண்டும் இணைப்பது என்ற அரசின் முடிவுவரவேற்கத்தக்கது என்று ராஜரத்தினம் கூறியபோது, திமுக உறுப்பினர் பரிதி இளம் வழுதி குறுக்கிட்டார். அவர்கூறுகையில்,
அரசு நல்ல திட்டங்களை அமல்படுத்தும்போது அதை திமுக முழு மனதுடன் ஆதரிக்கும். அதேசமயம்,குறைபாடுகளைச் சுட்டிக் காட்டும்போது அதை ஆளுங்கட்சியும் திருத்திக் கொள்ள வேண்டும்.
நிலைக் கண்ணாடி முன்பு சீவி, சிங்காரித்து, பொட்டிட்டு, பூச்சூடி அழகு பார்க்கும் பெண் போல ஆளுங்கட்சிஉள்ளது. அந்த நிலைக் கண்ணாடி போல எதிர்க்கட்சி உள்ளது.
தன் முகத்தை நிலைக் கண்ணாடியில் பார்த்து சீர் செய்து கொள்வது போல, ஆளுங்கட்சியும், நிலைக் கண்ணாடியாகபிரதிபலிக்கும் எதிர்க்கட்சிகள் சொல்வதைக் கேட்டு திருத்திக் கொள்ள வேண்டும் என்றார்.
அப்போது அதிமுக கொறடா நரசிம்மன் எழுந்து, நிலைக் கண்ணாடி ரசம் போய், உடைந்து, சீர்குலைந்து இருந்தால்எப்படி சரி செய்து கொள்வது என்று கேட்டார். இதைக் கேட்டதும் அதிமுக எம்.எல்.ஏக்கள் அனைவரும்கொல்லென்று சிரித்தனர்.
தொடர்ந்து பரிதி இளம்வழுதி பேசுகையில்,
ஆளுநர் உரையில் பல்வேறு பாதுகாப்புகள் குறித்து குறிப்பிடப்பட்டுள்ளது. ஆனால் இந்த ஆட்சியில் யாருக்குமேபாதுகாப்பு இல்லையே !
முன்னாள் எம்.எல்.ஏ. பாலன் காணாமல் போய் விட்டார். எனவே மனிதர்களுக்கு பாதுகாப்பு இல்லை.
வண்டலூர் பூங்காவில் சிங்கம் காணாமல் போய் விட்டது, எனவே விலங்குகளுக்கும் பாதுகாப்பில்லை.
கடற்கரையோரம் வைக்கப்பட்டிருந்த கண்ணகி சிலை காணாமல் போய் விட்டது. எனவே சிலைகளுக்கும் கூடபாதுகாப்பில்லை.
இவைகுறித்த அரசின் கருத்தை அறிய விரும்புகிறேன் என்றார்.
அப்போது முதல்வர் ஜெயலலிதா எழுந்து பதிலளிக்கையில்,
கண்ணகி சிலை எங்கும் போகவில்லை. இருக்க வேண்டிய இடத்தில் பத்திரமாக இருக்கிறது. கோர்ட் தீர்ப்பு வந்ததும்முறையான இடத்தில் வைக்கப்படும்.
வண்டலூரில் சிங்கம் எல்லாம் காணால் போகவில்லை. வெளியிலிருந்துதான் ஒரு சிறுத்தை உள்ளே வந்து விட்டது.அதனால்தான் அங்கு பதற்றம் ஏற்பட்டது.
பாலன் விஷயத்தில் போலீஸார் தீவிரமாக தேடி வருகின்றனர். எல்லா வழக்குகளிலும் போலீஸார் வெற்றிபெறுவதில்லை. இது தமிழகத்தில் மட்டுமல்ல, இந்தியாவில் எல்லா மாநிலங்களிலும் நடப்பதுதான் என்றார்.
இவ்வாறு வாதம் தொடர்ந்தது.
-
SP Velumani: வேலுமணிக்கு வில்லனாக மாறிய முனுசாமி.. பதவிக்கு விழுந்த வேட்டு! -
வருங்கால இளைஞர்களுக்கு வழிவிடுங்க! அதிமுக ராஜசத்யன் திடீர் ட்வீட்! டீகோடு செய்து பார்த்தால்..! -
இர்ஃபானின் ரூ. 3650 பிரியாணியை வறுத்தெடுத்த யூடியூப்பர்.. ப்ளூ சட்டை மாறனுடன் ஒப்பிட்டு கலாய் -
எல்பிஜி சிலிண்டர் பயன்படுத்துபவர்களுக்கு..நாளை முதல் புதிய கட்டுப்பாடுகள்! PNGக்கு மாற்றம் கட்டாயம்? -
வங்கி கணக்கில் வரும் ரூ.3000.. விஜய் அனுப்பும் ஜூன் மாத தொகை.. 3 திட்டங்களில் கிடைக்கும் பணம் -
கப்பு முக்கியம் பிகிலு.. விடாபிடியாய் நிற்கும் விஜய்.. ஓசூர்-க்கு ஜாக்பாட்! -
இந்தா ஆரம்பிச்சுட்டாங்கல்ல.. திருச்சி இடை தேர்தலில் திமுகவில் சீட் யாருக்கு! ரேசில் அன்பில் - இனிகோ! -
Indoor Plants: வீட்டின் காற்றைச் சுத்திகரித்து ஆக்ஸிஜன் அளவை அதிகரிக்கும் இன்டோர் செடிகள்! -
தேசிய அளவில் பலவீனமடையும் பாஜக எதிர்ப்பு.. காங்கிரஸ் செயலால் திட்டத்தை மாற்றும் திமுக! -
திருச்சி கிழக்கு இடைத்தேர்தல்.. தவெக வேட்பாளராக சிரஞ்சீவி? மேடையில் முதல்வர் விஜய் தந்த செம ஹிண்ட் -
"விஜய்" பெயரை யாரும் சொல்லக் கூடாது.. வார்த்தையைவிட்ட துணை சபாநாயகர்.. பத்திரிகையாளர் சொன்ன பதில்! -
திமுகவை தோற்கடித்த 8 அதிர்ச்சி காரணங்கள்.. ஸ்டாலின் மேஜைக்கு போன இறுதி ரிப்போர்ட்.. உள்ளே ஷாக்!












Click it and Unblock the Notifications