இன்று உச்ச நீதிமன்றம் முக்கிய விசாரணை
டெல்லி:
அயோத்தி விவகாரத்தில் உச்ச நீதிமன்றம் அளிக்கப் போகும் தீர்ப்பை எதிர்பார்த்து நாடே ஆவலாகக்காத்திருக்கிறது. அங்கு பூஜை நடத்த வி.எச்.பிக்கு அனுமதி தருவதா இல்லையா என்பது குறித்த வழக்கு விசாரணைகாலை 10.35 மணிக்குத் தொடஙகியது.
அயோத்தியில் பிரச்சனைக்குள்ளாகாத இடத்தில் கோவில் கட்டவும் அதற்காக பூஜை நடத்தவும் விஸ்வ ஹிந்துபரிஷத்தும், ராமஜென்ம பூமி அறக்கட்டளையும் திட்டமிட்டுள்ளன. பூஜையை ஒட்டி கோவில் கட்ட ஒரு கல்லைதானம் செய்யவும் திட்டமிடப்பட்டுள்ளது.
இதை எதிர்த்து இரு முஸ்லீம்கள் உச்ச நீதிமன்றத்தில் வழக்குத் தாக்கல் செய்துள்ளனர். இதில் ஒரு மனு இன்றுவிசாரிக்கப்படுகிறது. இந்த மனுவில் கூறப்பட்டுள்ளதாவது:
அயோத்தி பிரச்சனை குறித்து உச்சநீதிமன்றத்தில் வழக்கு நடந்து வருகிறது. இந்தப் பிரச்சனையைத் தீர்க்கபேச்சுவார்த்தையும் நடந்து வருகிறது. 1994ம் ஆண்டு உச்சநீதிமன்றம் வழங்கிய இடைக்காலத் தீர்ப்பில் இறுதிதீர்ப்பு வரும் வரை அயோத்தியில் கோவிலும் கட்டக் கூடாது. மசூதியும் கட்டக் கூடாது என்று கூறப்பட்டுள்ளது.
ஆனால், இந்தத் தீர்ப்பை மீறி இப்போது அயோத்தியில் பூஜை நடத்தவும், கோவில் கட்டவும் வி.எச்.பி.திட்டமிட்டுள்ளது. இதைத் தடுக்க வேண்டும்.
மேலும் கோவில் கட்டுவதற்காக செதுக்கப்பட்டு அயோத்தி தெருக்களில் போடப்பட்டுள்ள தூண்களைக் கைப்பற்றவேண்டும்.
இதற்காக ராஜஸ்தானிலும் தூண்கள் செதுக்கப்பட்டு தயார் நிலையில் வைக்கப்பட்டுள்ளன. அவற்றையும் பறிமுதல்செய்ய வேண்டும்.
15ம் தேதி பூஜையும் நடத்தவும் கோவில் கட்டும் பணியைத் தொடங்கவும் தடை விதிக்க வேண்டும்.
அயோத்தியை ராணுவத்திடம் ஒப்படைக்க வேண்டும் என அந்த மனுவில் கூறப்பட்டுள்ளது.
இந்த மனு இன்று விசாரிக்கப்படுகிறது. நீதிபதி கிர்பால், நீதிபதி பட்நாயக், நீதிபதி காகே ஆகியோர் அடங்கியடிவிஷன் பெஞ்ச் இதை விசாரிக்கிறது.
அரசின் திட்டம் என்ன?:
பிரச்சனைக்குள்ளாக இடத்தில் சிறிய அளவில் பூஜை நடத்த அனுமதி தரலாம் என மத்திய அரசின் வழக்கறிஞர்வாதாடுவார் என்று தெரிகிறது. ஆனால், இதற்கு தேசிய ஜனநாயகக் கூட்டணியில் உள்ள தெலுங்குதேசம், திமுக,திரிணமூல் காங்கிரஸ், லோக்தந்திக் ஜனதா தள் ஆகியவை எதிர்ப்புத் தெரிவித்துள்ளன. அதே நேரத்தில் உச்சநீதிமன்றம் முடிவை ஆதரிப்போம் என அறிவித்துள்ளன.
வி.எச்.பி. என்ன செய்யும்?:
இந்த விவகாரத்தில் வி.எச்.பிக்கும் ராமஜென்மபூமி அறக்கட்டளைக்கும் இடையே கூட கருத்து வேறுபாடுகள்நிலவி வருகின்றன. தங்களை கலந்து ஆலோசிக்காமல் வி.எச்.பி. முடிவெடுப்பதாகக் கருதும் ராமஜென்மபூமிஅறக்கட்டளைத் தலைவர் பரமஹம்ஸ் பூஜை எதையும் நடத்த மாட்டேன் என்று அறிவித்துள்ளார்.
ஆனால், அவரை சமாதானப்படுத்தும் நடவடிக்கைகளில் வி.எச்.பி. ஈடுபட்டுள்ளது.
நீதிமன்றம் முடிவுக்குக் கட்டுப்பட மாட்டோம் என பேசி வந்த வி.எச்.பியும் இறங்கிவந்துவிட்டது. இன்றுகொடுக்கப்படும் தீர்ப்பை மதிப்போம் என அறிவித்துள்ளது.
முஸ்லீம்கள் நிலை?:
உச்ச நீதிமன்றம் அளிக்கும் தீர்ப்பை ஏற்பதாக இஸ்லாமிய சட்ட வாரியம் அறிவித்துள்ளது. தங்களுக்கு எதிரானதீர்ப்பு வந்தால் அதை எதிர்த்து அப்பீல் செய்யவும் இந்த வாரியம் திட்டமிட்டுள்ளதாகத் தெரிகிறது.
-
கப்பு முக்கியம் பிகிலு.. விடாபிடியாய் நிற்கும் விஜய்.. ஓசூர்-க்கு ஜாக்பாட்! -
இந்தா ஆரம்பிச்சுட்டாங்கல்ல.. திருச்சி இடை தேர்தலில் திமுகவில் சீட் யாருக்கு! ரேசில் அன்பில் - இனிகோ! -
Indoor Plants: வீட்டின் காற்றைச் சுத்திகரித்து ஆக்ஸிஜன் அளவை அதிகரிக்கும் இன்டோர் செடிகள்! -
தேசிய அளவில் பலவீனமடையும் பாஜக எதிர்ப்பு.. காங்கிரஸ் செயலால் திட்டத்தை மாற்றும் திமுக! -
திருச்சி கிழக்கு இடைத்தேர்தல்.. தவெக வேட்பாளராக சிரஞ்சீவி? மேடையில் முதல்வர் விஜய் தந்த செம ஹிண்ட் -
"விஜய்" பெயரை யாரும் சொல்லக் கூடாது.. வார்த்தையைவிட்ட துணை சபாநாயகர்.. பத்திரிகையாளர் சொன்ன பதில்! -
திமுகவை தோற்கடித்த 8 அதிர்ச்சி காரணங்கள்.. ஸ்டாலின் மேஜைக்கு போன இறுதி ரிப்போர்ட்.. உள்ளே ஷாக்! -
தவெகவின் முதல் ராஜ்யசபா எம்.பி யார்? 4 பேரில் ஒருவர் பெயரை 'டிக்' அடிக்க ரெடியாகும் விஜய்! -
ஒரு 'நாளுக்கு' ரூ.22.63 லட்சம் சம்பளம் வாங்கும் இன்போசிஸ் ஊழியர்.. யாருப்பா அது! -
நன்றி மறக்காத விஜய்.. தவெகவின் முதல் ராஜ்யசபா எம்பி யார்? ரேசில் முன்னணியில் ’லெஃப்ட் - ரைட்’ ஹேண்ட் -
“தவெகவுக்கு ஓட்டு போடாத தென்காசி மக்களும் பாதிக்கப்படுகிறோம்”.. நள்ளிரவில் எழுந்த திடீர் போராட்டம்! -
“விஜய் இன்னொரு கருணாநிதி என நிரூபித்து வருகிறார்”.. அட்டாக் மோடில் வானதி சீனிவாசன்












Click it and Unblock the Notifications