நிலம் அபகரிப்பு: முத்துக்கருப்பன் மீது புகார்
சென்னை:
சென்னை அண்ணா நகரில் ரூ.1.5 கோடி மதிப்புள்ள நிலத்தை அபகரித்து விட்டதாக சென்னை மாநகர முன்னாள்போலீஸ் கமிஷனர் முத்துக்கருப்பன் மீது புகார் கூறப்பட்டுள்ளது. இதுதொடர்பாக அவர் மீது வழக்குத் தொடரஉத்தரவிடுமாறு சென்னை முதன்மை செஷன்ஸ் கோர்ட்டில் மனு தாக்கல் செய்யப்பட்டுள்ளது.
சென்னை சில்வின் காலனியைச் சேர்ந்த சண்முகம் என்பவர் இந்த மனுவைத் தாக்கல் செய்துள்ளார். அவர் தனதுமனுவில் கூறியுள்ளதாவது:
திருச்சி ஆயுதப் படை ஐஜியாக உள்ள முத்துக்கருப்பன் சென்னை கமிஷனராக இருந்தபோது, அண்ணா நகரில்உள்ள எனக்குச் சொந்தமான நலத்தை அபகரித்துக் கொண்டார். அதன் மதிப்பு ரூ.1.5 கோடியாகும்.
இதுதொடர்பாக ஊழல் தடுப்புப் போலீஸில் புகார் கொடுத்தேன். ஆனால் புகாரை ஏற்க ஊழல் தடுப்புத் துறைமறுத்து விட்டது.
எனவே எனது புகாரை ஏற்று, முத்துக்கருப்பன் மீது வழக்குத் தொடர உத்தரவிட வேண்டும் என்று தன் மனுவில்சண்முகம் கோரியிருந்தார்.
இந்த மனு மீதான விசாரணையை மார்ச் 18ம் தேதிக்கு நீதிபதி அசோக்குமார் ஒத்திவைத்தார்.
சண்முகம் வாங்கிய அண்ணா நகர் நிலம், மேயர் மு.க.ஸ்டாலினின் நெருங்கிய நண்பரான ரமேஷுக்குச்சொந்தமானது. இந்த ரமேஷ், தனது குடும்பத்தினருடன் தற்கொலை செய்து கொண்டார் என்பது குறிப்பிடத்தக்கது.
சண்முகம் தொடர்ந்து தனது மனுவில் கூறுகையில், ரமேஷிடமிருந்து இந்த நிலத்தை வாங்கியதைத் தெரிந்துகொண்ட முத்துக்கருப்பன், அந்த நிலத்தை இரண்டு அரசியல்வாதிகளுடன் சேர்ந்து மிரட்டி, அபகரித்துக்கொண்டார்.
கடந்த ஆண்டு ஆகஸ்ட் மாதம் இந்த அபகரிப்பு நடந்தது. இதுதொடர்பாக மார்ச் 5ம் தேதி ஊழல் தடுப்புப்போலீஸில் புகார் கொடுத்தேன். ஆனால் முதல் தகவல் அறிக்கை தாக்கல் செய்ய அவர்கள் மறுத்து விட்டனர் என்றுசண்முகம் கூறியிருந்தார்.
-
இர்ஃபானின் ரூ. 3650 பிரியாணியை வறுத்தெடுத்த யூடியூப்பர்.. ப்ளூ சட்டை மாறனுடன் ஒப்பிட்டு கலாய் -
Indoor Plants: வீட்டின் காற்றைச் சுத்திகரித்து ஆக்ஸிஜன் அளவை அதிகரிக்கும் இன்டோர் செடிகள்! -
தேசிய அளவில் பலவீனமடையும் பாஜக எதிர்ப்பு.. காங்கிரஸ் செயலால் திட்டத்தை மாற்றும் திமுக! -
திருச்சி கிழக்கு இடைத்தேர்தல்.. தவெக வேட்பாளராக சிரஞ்சீவி? மேடையில் முதல்வர் விஜய் தந்த செம ஹிண்ட் -
நன்றி மறக்காத விஜய்.. தவெகவின் முதல் ராஜ்யசபா எம்பி யார்? ரேசில் முன்னணியில் ’லெஃப்ட் - ரைட்’ ஹேண்ட் -
“தவெகவுக்கு ஓட்டு போடாத தென்காசி மக்களும் பாதிக்கப்படுகிறோம்”.. நள்ளிரவில் எழுந்த திடீர் போராட்டம்! -
"பச்சை துரோகம்.. வாக்கு அறுவடை முடிந்ததும் ரிசர்வ் வங்கியை காரணம் காட்டுவதா?" தங்கம் தென்னரசு தாக்கு -
திமுகவிற்கு விஜய் சொன்ன 'நோ'.. ஸ்விட்ச் ஆப் ஆன போன்.. மேஜைக்கு வந்த உளவுத்துறை ரிப்போர்ட்! -
SP Velumani: வேலுமணிக்கு வில்லனாக மாறிய முனுசாமி.. பதவிக்கு விழுந்த வேட்டு! -
கொ*யில் முடிந்த பார் டான்ஸ்.. கொதித்துப் போன கோயம்பேடு! யான்சிக்கு இப்படியா சாவு வரனும்! ஷாக்! -
Annamalai New Party LIVE:தனிக் கட்சி தொடங்குகிறார் அண்ணாமலை? பிறந்தநாளன்று வெளியாகும் அப்டேட்? -
விஜய்க்கு பெரிய தலைவலி.. ஒரே நாளில் வீட்டுக்கு போன 5000 ஊழியர்கள் ஓய்வு! ஆட்டம் காணும் அரசு துறைகள்












Click it and Unblock the Notifications