திரைப்படப் பிரிவினரின் பாரபட்சம்: மாஜி திமுக அமைச்சர் புகார்
சென்னை:
சட்டசபை நிகழ்ச்சிகள் குறித்த டிவி தொகுப்புகளில் எதிர்க்கட்சி உறுப்பினர்களின் பேச்சுக்கள் சென்சார்செய்யப்படுவதாக திமுக எம்.எல்.ஏவும் முன்னாள் அமைச்சருமான துரைமுருகன் புகார் கூறினார்.
தமிழக சட்டசபையில் கேள்வி நேரம் முடிந்ததும் திமுக உறுப்பினர் துரைமுருகன் ஒழுங்கு பிரச்சினை ஒன்றைக்கிளப்பினார். அவர் கூறுகையில்,
சட்டசபை நிகழ்ச்சிகளை தமிழக திரைப்படப் பிரிவினர் படம் பிடித்து டிவிக்களுக்குக் கொடுக்கிறார்கள். இதில்பாரபட்சம் காட்டப்படுவதில்லை என்று சபாநாயகர் கூறியுள்ளார். ஆனால் பாரபட்சமான போக்கு இன்னும்தொடர்கிறது என்பதைக் கூற விரும்புகிறேன்.
செவ்வாய்க்கிழமை முதல்வர் பேசுகையில், கடந்த திமுக ஆட்சியில் என்ன செய்தீர்கள் என்று கேட்டார். அதற்குநான் விலாவாரியாகப் பதில் அளித்தேன். ஆனால் இந்தக் கேள்வியும் பதிலும் டிவிகளுக்குக் கொடுக்கப்பட்டதொகுப்பில் இடம் பெறவில்லை.
அவை ஜெயா டிவியிலும் இல்லை, சன் டிவியிலும் இல்லை. எனவே எதிர்க்கட்சி உறுப்பினர்களின் உரிமைகளுக்குசபாநாயகர் உரிய பாதுகாப்பு வழங்க வேண்டும் என்றார்.
அதற்குப் பதிலளித்த சபாநாயகர் காளித்து, மொத்தமே அரை மணி நேர தொகுப்பே டிவிகளுக்குக்கொடுக்கப்படுகிறது. இதற்குள் முக்கியமான நிகழ்ச்சிகளை மட்டுமே காட்ட முடியும். அதில் உறுப்பினர் கூறியகாட்சிகள் விடுபட்டுப் போயிருக்கலாம். இருப்பினும் எதிர்காலத்தில் எதிர்க்கட்சியினரின் காட்சிகளையும் சேர்த்துக்கொள்ளுமாறு திரைப்படப் பிரிவினருக்கு உத்தரவிடுகிறேன் என்றார்.
-
வங்கி கணக்கில் வரும் ரூ.3000.. விஜய் அனுப்பும் ஜூன் மாத தொகை.. 3 திட்டங்களில் கிடைக்கும் பணம் -
கப்பு முக்கியம் பிகிலு.. விடாபிடியாய் நிற்கும் விஜய்.. ஓசூர்-க்கு ஜாக்பாட்! -
இந்தா ஆரம்பிச்சுட்டாங்கல்ல.. திருச்சி இடை தேர்தலில் திமுகவில் சீட் யாருக்கு! ரேசில் அன்பில் - இனிகோ! -
Indoor Plants: வீட்டின் காற்றைச் சுத்திகரித்து ஆக்ஸிஜன் அளவை அதிகரிக்கும் இன்டோர் செடிகள்! -
தேசிய அளவில் பலவீனமடையும் பாஜக எதிர்ப்பு.. காங்கிரஸ் செயலால் திட்டத்தை மாற்றும் திமுக! -
திருச்சி கிழக்கு இடைத்தேர்தல்.. தவெக வேட்பாளராக சிரஞ்சீவி? மேடையில் முதல்வர் விஜய் தந்த செம ஹிண்ட் -
"விஜய்" பெயரை யாரும் சொல்லக் கூடாது.. வார்த்தையைவிட்ட துணை சபாநாயகர்.. பத்திரிகையாளர் சொன்ன பதில்! -
திமுகவை தோற்கடித்த 8 அதிர்ச்சி காரணங்கள்.. ஸ்டாலின் மேஜைக்கு போன இறுதி ரிப்போர்ட்.. உள்ளே ஷாக்! -
தவெகவின் முதல் ராஜ்யசபா எம்.பி யார்? 4 பேரில் ஒருவர் பெயரை 'டிக்' அடிக்க ரெடியாகும் விஜய்! -
ஒரு 'நாளுக்கு' ரூ.22.63 லட்சம் சம்பளம் வாங்கும் இன்போசிஸ் ஊழியர்.. யாருப்பா அது! -
நன்றி மறக்காத விஜய்.. தவெகவின் முதல் ராஜ்யசபா எம்பி யார்? ரேசில் முன்னணியில் ’லெஃப்ட் - ரைட்’ ஹேண்ட் -
“தவெகவுக்கு ஓட்டு போடாத தென்காசி மக்களும் பாதிக்கப்படுகிறோம்”.. நள்ளிரவில் எழுந்த திடீர் போராட்டம்!












Click it and Unblock the Notifications