லக்னோவில் கழிவுநீர் தொட்டியில் மூழ்கி 21 பேர் பலி
லக்னோ:
லக்னோவில் இன்று (வியாழக்கிழமை) ராணுவத்திற்கு ஆளெடுக்கும் தேர்வில் கலந்து கொள்ளச் சென்ற 21இளைஞர்கள் கழிவுநீர் தொட்டியில் தவறி விழுந்து பரிதாபமாக உயிரிழந்தனர்.
லக்னோவில் உள்ள கன்டோன்மென்ட் பகுதியில் ராணுவத்திற்கு ஆளெடுக்கும் தேர்வு நடந்தது. இதற்காக சுமார்5,000 இளைஞர்கள் காலை 4.30 மணிக்கே அப்பகுதியில் கூடி விட்டனர்.
கூட்டம் கூட்டமாக சென்று கொண்டிருந்த இளைஞர்கள், காங்கிரீட் பலகையால் மூடப்பட்டிருந்த ஒரு கழிவுநீர்தொட்டி மீது நடந்து சென்றபோது, அப்பலகை திடீரென்று உடைந்து விழுந்தது.
இதையடுத்து அதன் மீது நடந்து கொண்டிருந்த இளைஞர்கள் மொத்தமாக அந்தத் தொட்டிக்குள் விழுந்துமூழ்கினர்.
குறுகிய அந்தத் தொட்டிக்குள் மொத்தமாக அந்த இளைஞர்கள் விழுந்ததால் அவர்களால் தப்பிக்க முடியவில்லை.
மீட்புப் படையினர் விரைந்து வந்து செயலில் இறங்கினர். அந்தத் தொட்டியிலிருந்து 21 இளைஞர்களின் உடல்கள்மீட்கப்பட்டன.
இச்சம்பவத்தில் அதிர்ஷ்டவசமாக உயிர் பிழைத்த 3 இளைஞர்கள், பலத்த காயங்களுடன் மருத்துவமனையில்சேர்க்கப்பட்டுள்ளனர்.
இந்தச் சம்பவத்தால் ஆத்திரமடைந்த பல இளைஞர்கள், இறந்து போன சிலரின் உடல்களை வைத்துக் கொண்டுஆர்ப்பாட்டத்தில் இறங்கினர். இதையடுத்து ஏற்பட்ட வன்முறையில் கார்கள், பஸ்கள் நொறுக்கப்பட்டன.
இந்தச் சம்பவம் நாடாளுமன்றத்திலும் எதிரொலித்தது. சமாஜ்வாடி கட்சி தலைவர் முலாயம் சிங் யாதவ் இந்தப்பிரச்சனையைக் கிளப்பி, மக்களவையை சிறிது நேரம் ஸ்தம்பிக்க வைத்தார்.
-
எல்பிஜி சிலிண்டர் பயன்படுத்துபவர்களுக்கு..நாளை முதல் புதிய கட்டுப்பாடுகள்! PNGக்கு மாற்றம் கட்டாயம்? -
இந்தா ஆரம்பிச்சுட்டாங்கல்ல.. திருச்சி இடை தேர்தலில் திமுகவில் சீட் யாருக்கு! ரேசில் அன்பில் - இனிகோ! -
தவெகவின் முதல் ராஜ்யசபா எம்.பி யார்? 4 பேரில் ஒருவர் பெயரை 'டிக்' அடிக்க ரெடியாகும் விஜய்! -
20 நிமிடம்.. அஜித்குமார் தாயாருக்கு முதல்வர் விஜய் நேரில் அஞ்சலி.. சென்னை வீட்டுக்கு சென்று ஆறுதல் -
"விஜய்" பெயரை யாரும் சொல்லக் கூடாது.. வார்த்தையைவிட்ட துணை சபாநாயகர்.. பத்திரிகையாளர் சொன்ன பதில்! -
திமுகவை தோற்கடித்த 8 அதிர்ச்சி காரணங்கள்.. ஸ்டாலின் மேஜைக்கு போன இறுதி ரிப்போர்ட்.. உள்ளே ஷாக்! -
ஓரம் கட்டப்பட்ட சித்தராமையா.. ஆட்சி அமைக்க டி.கே.சிவகுமாருக்கு ஆளுநர் அழைப்பு! ஆட்டம் ஆரம்பம் -
விஜய் என் வீடு தேடி வந்து எனக்கு துணை முதல்வர் பதவி கொடுத்திருப்பார்! பிரேமலதா பரபரப்பு தகவல் -
என்னை தொட்டிருக்கவே கூடாது.. கோவையில் வேலுமணிக்கு தண்ணி காட்டும் எடப்பாடி.. அடித்து ஆடும் வேலுசாமி -
விஜய்-ஐ அடித்து மேலே வந்த சிவக்குமார்.. லீமா ரோஸ் கொடுத்த ஷாக்! -
கொஞ்சம் அவகாசம் கொடுங்க.. எங்களுக்கு ஓட்டு போட்டதற்கு பெருமையடைய வைப்போம்.. அமைச்சர் ரமேஷ் -
ஒரு 'நாளுக்கு' ரூ.22.63 லட்சம் சம்பளம் வாங்கும் இன்போசிஸ் ஊழியர்.. யாருப்பா அது!












Click it and Unblock the Notifications