புலிகளின் கோட்டையில் ரணில்
யாழ்ப்பாணம்:
இலங்கைப் பிரதமர் ரணில் விக்கிரமசிங்கே இரண்டு நாள் பயணமாக விடுதலைப்புலிகளின் கோட்டையானயாழ்ப்பாணம் சென்று சேர்ந்துள்ளார்.
யாழ்ப்பாணத் தமிழர்களின் வாழ்வை மேம்படுத்துவதற்காகவே நான் இங்கே வந்துள்ளேன். தெற்குப் பகுதிகளில்வசிக்கும் இலங்கை மக்கள் போலவே முழு சுதந்திரத்துடன் இந்த வடக்குப் பகுதி மக்களும் வாழவே நாங்கள்விரும்புகிறோம் என்று யாழ்ப்பாணம் வந்து இறங்கியவுடன் நிருபர்களிடம் கூறினார்.
பாதுகாப்புத்துறை அமைச்சர் திலக் மாரப்பனே, மற்றும் முப்படைத் தளபதிகளுடன் இலங்கை விமானப்படையின்சிறப்பு விமானத்தில் இன்று காலை யாழ்ப்பாண விமானத் தளத்திற்கு வந்தார் ரணில்.
அங்குள்ள விமானத் தளத்தில் உள்ள ராணுவ வீரர்களுடன் சிறிது நேரம் ரணில் பேசினார். நிரந்தரப் போர்நிறுத்தஒப்பந்தத்தை முழு அளவில் வெற்றி பெறச் செய்ய வேண்டியது உங்கள் கடமை என்றும் இதில் நாம் ஒரு சிறியதவறைச் செய்தாலும் கூட சர்வதேச அளவில் அது நம்மைப் பாதிக்கும் என்றும் ராணுவத்தினரிடம் அவர் கூறினார்.
பின்னர் தனி ஹெலிகாப்டர் மூலம் யாழ்ப்பண தீபகற்பத்திற்கு ரணில் கிளம்பினார். அங்கு பல்வேறு அரசியல்மற்றும் மதத் தலைவர்களை மட்டுமல்லாமல் பொதுமக்களையும் சந்தித்துப் பேச்சு நடத்தவுள்ளார்.
யாழ்ப்பாணத்திற்கும் கண்டிக்கும் இடையே சாலைப் போக்குவரத்தை மீண்டும் துவக்குவதற்கான வேலையில்தான்அவர் தற்போது முழு மூச்சுடன் இறங்குவார் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
அந்தச் சாலை பல இடங்களில் பழுதுபட்டுள்ளதால் அதைச் சரிசெய்யும் வேலை முடுக்கி விடப்பட்டுள்ளது.எப்படியும் அடுத்த ஒரு மாதத்திற்குள் இந்தச் சாலை திறக்கப்படும் என்றும் தெரிகிறது.
அமைதிப் பேச்சுக்கு யாழ்ப்பாண மக்களின் ஒட்டு மொத்த ஆதரவினால் பூரிப்படைந்துள்ள ரணில், அவர்களுக்குநன்றிகளைத் தெரிவித்தார்.
-
திருச்சி கிழக்கு இடைத்தேர்தல்.. தவெக வேட்பாளராக சிரஞ்சீவி? மேடையில் முதல்வர் விஜய் தந்த செம ஹிண்ட் -
நன்றி மறக்காத விஜய்.. தவெகவின் முதல் ராஜ்யசபா எம்பி யார்? ரேசில் முன்னணியில் ’லெஃப்ட் - ரைட்’ ஹேண்ட் -
“தவெகவுக்கு ஓட்டு போடாத தென்காசி மக்களும் பாதிக்கப்படுகிறோம்”.. நள்ளிரவில் எழுந்த திடீர் போராட்டம்! -
"பச்சை துரோகம்.. வாக்கு அறுவடை முடிந்ததும் ரிசர்வ் வங்கியை காரணம் காட்டுவதா?" தங்கம் தென்னரசு தாக்கு -
திமுகவிற்கு விஜய் சொன்ன 'நோ'.. ஸ்விட்ச் ஆப் ஆன போன்.. மேஜைக்கு வந்த உளவுத்துறை ரிப்போர்ட்! -
SP Velumani: வேலுமணிக்கு வில்லனாக மாறிய முனுசாமி.. பதவிக்கு விழுந்த வேட்டு! -
கொ*யில் முடிந்த பார் டான்ஸ்.. கொதித்துப் போன கோயம்பேடு! யான்சிக்கு இப்படியா சாவு வரனும்! ஷாக்! -
Annamalai New Party LIVE:தனிக் கட்சி தொடங்குகிறார் அண்ணாமலை? பிறந்தநாளன்று வெளியாகும் அப்டேட்? -
விஜய்க்கு பெரிய தலைவலி.. ஒரே நாளில் வீட்டுக்கு போன 5000 ஊழியர்கள் ஓய்வு! ஆட்டம் காணும் அரசு துறைகள் -
நான் பார்த்துகிறேன் நண்பா.. உறுதியாக சொன்ன விஜய்.. அஜித் தாய் மறைந்த இரவு.. நடந்தது என்ன? -
பிளாக் அண்ட் ஒயிட் கோட் சூட் அணிவது இதற்காகத் தான்.. ரகசியத்தை போட்டு உடைத்த விஜய்! -
காலியான ராஜ்யசபா எம்பி பதவி! இன்று வேட்புமனு தாக்கல் தொடக்கம்! தவெகவின் முதல் எம்பி யார்?












Click it and Unblock the Notifications