ஊராட்சி தலைவர் கொலை: திருப்பூரில் பந்த்
திருப்பூர்:
திருப்பூர் அருகே உள்ள இடுவாய் ஊராட்சி மன்றத் தலைவர் கொலை செய்யப்பட்டதைக் கண்டித்து திருப்பூரில்இன்று (வியாழக்கிழமை) அனைத்துக் கட்சிகள் முழு அடைப்பு நடத்தின.
மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியைச் சேர்ந்த ரத்தினசாமி என்ற அந்த ஊராட்சித் தலைவரை ஒரு கும்பல் ஓட ஓடவிரட்டிச் சென்று அரிவாளால் பயங்கரமாக வெட்டிக் கொலை செய்தது.
பின்னர் அவரது கழுத்தைக் கயிற்றால் கட்டி, உடலை ஒரு மரத்தில் தொங்கவிட்டு அந்தக் கும்பல் ஓடி விட்டது.இந்தக் கொலைச் சம்பவம் திருப்பூர் பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
இந்நிலையில் நேற்று மாலை திருப்பூரில் கம்யூனிஸ்ட், தமாகா மற்றும் திமுக ஆகிய கட்சிகளின் தலைவர்கள் கூடி,இந்தக் கொலைச் சம்பவத்தைக் கண்டித்து இன்று அங்கு முழு அடைப்பு நடத்துவதெனத் தீர்மானித்தனர்.
அதன்படி இன்று திருப்பூரில் இன்று முழு அடைப்பு நடைபெற்றது. கடைகள், அலுவலகங்கள் மூடப்பட்டிருந்தன.இதனால் இயல்பு வாழ்க்கை பாதிக்கப்பட்டது.
திருப்பூரில் உள்ள சில பகுதிகளில் கல் வீச்சுச் சம்பவங்கள் நடந்ததாகவும் இதில் சில பேருந்துகள்சேதமடைந்ததாகவும் தகவல்கள் தெரிவித்தன.
சட்டசபையில் எதிர்க் கட்சிகள் அமளி:
ரத்தினசாமி கொலை வழக்கு இன்று தமிழக சட்டசபையிலும் எதிரொலித்தது. இதைக் கண்டித்து எதிர்க் கட்சிகள்கடும் அமளியில் இறங்கின.
ஆனால் இவற்றுக்குப் பதிலளித்து ஜெயலலிதா பேசுகையில்,
ரத்தினசாமி கொலை வழக்கு தொடர்பாக அரசு ஒன்றும் சும்மா இருக்கவில்லை. இதற்காக 6 தனிப்படை போலீசார்அமைக்கப்பட்டு, கொலையாளிகளைப் போலீசார் தேடிக் கொண்டுதான் உள்ளனர்.
இந்தக் கொலைச் சம்பவம் தொடர்பாக பல்வேறு கோணங்களில் விசாரணை நடத்தி வரும் போலீசார், விரைவில்கொலையாளிகளைப் பிடித்து விடுவார்கள் என்று கூறினார்.
-
வங்கி கணக்கில் வரும் ரூ.3000.. விஜய் அனுப்பும் ஜூன் மாத தொகை.. 3 திட்டங்களில் கிடைக்கும் பணம் -
கப்பு முக்கியம் பிகிலு.. விடாபிடியாய் நிற்கும் விஜய்.. ஓசூர்-க்கு ஜாக்பாட்! -
இந்தா ஆரம்பிச்சுட்டாங்கல்ல.. திருச்சி இடை தேர்தலில் திமுகவில் சீட் யாருக்கு! ரேசில் அன்பில் - இனிகோ! -
Indoor Plants: வீட்டின் காற்றைச் சுத்திகரித்து ஆக்ஸிஜன் அளவை அதிகரிக்கும் இன்டோர் செடிகள்! -
தேசிய அளவில் பலவீனமடையும் பாஜக எதிர்ப்பு.. காங்கிரஸ் செயலால் திட்டத்தை மாற்றும் திமுக! -
திருச்சி கிழக்கு இடைத்தேர்தல்.. தவெக வேட்பாளராக சிரஞ்சீவி? மேடையில் முதல்வர் விஜய் தந்த செம ஹிண்ட் -
"விஜய்" பெயரை யாரும் சொல்லக் கூடாது.. வார்த்தையைவிட்ட துணை சபாநாயகர்.. பத்திரிகையாளர் சொன்ன பதில்! -
திமுகவை தோற்கடித்த 8 அதிர்ச்சி காரணங்கள்.. ஸ்டாலின் மேஜைக்கு போன இறுதி ரிப்போர்ட்.. உள்ளே ஷாக்! -
தவெகவின் முதல் ராஜ்யசபா எம்.பி யார்? 4 பேரில் ஒருவர் பெயரை 'டிக்' அடிக்க ரெடியாகும் விஜய்! -
ஒரு 'நாளுக்கு' ரூ.22.63 லட்சம் சம்பளம் வாங்கும் இன்போசிஸ் ஊழியர்.. யாருப்பா அது! -
நன்றி மறக்காத விஜய்.. தவெகவின் முதல் ராஜ்யசபா எம்பி யார்? ரேசில் முன்னணியில் ’லெஃப்ட் - ரைட்’ ஹேண்ட் -
“தவெகவுக்கு ஓட்டு போடாத தென்காசி மக்களும் பாதிக்கப்படுகிறோம்”.. நள்ளிரவில் எழுந்த திடீர் போராட்டம்!












Click it and Unblock the Notifications