ரெய்ட் எதிரொலி: மாஜி திமுக அமைச்சர்கள், பிரமுகர்கள் மீது வழக்குகள் பதிவு
சென்னை:
முன்னாள் திமுக அமைச்சர்கள் பொன்முடி, அந்தியூர் செல்வராஜ், சுரேஷ் ராஜன், மதுரை மாநகர மேயர்குழந்தைவேலு மற்றும் முன்னாள் எம்.எல்.ஏ. பெரியசாமி ஆகியோர் வருமானத்துக்கு அதிகமாகச் சொத்துசேர்த்துள்ளதாக மீது லஞ்ச ஒழிப்புத் துறை போலீசார் வழக்குகளைப் பதிவு செய்துள்ளனர்.
கடந்த வெள்ளிக்கிழமை நள்ளிரவிலிருந்து தமிழகம் முழுவதும் உள்ள திமுக முன்னாள் அமைச்சர்கள் மற்றும்முக்கியப் பிரமுகர்களின் வீடுகளில் அதிரடி சோதனை நடந்து வருகிறது.
மொத்தம் 32 வீடுகளில் நடத்தப்பட்ட சோதனையில் ரூ.4 லட்சம் பணத்தையும் 550 பவுன் நகைகளையும் லஞ்சஒழிப்புப் போலீசார் பறிமுதல் செய்தனர்.
இதையடுத்து அவர்கள் அனைவர் மீதும் வருமானத்துக்கு அதிகமாகச் சொத்து சேர்த்ததாக வழக்குகள் பதிவுசெய்யப்பட்டிருப்பதாக லஞ்ச ஒழிப்புத் துறை இயக்குநர் வி.கே. ராஜகோபாலன் நிருபர்களிடம் கூறினார்.
விழுப்புரத்தில் உள்ள பொன்முடியின் வீட்டிலும் ஆந்திராவில் உள்ள அவருடைய மாமனார் வீட்டிலும் நேற்றுநள்ளிரவுக்கும் மேல் சோதனை தொடர்ந்து நடைபெற்றன.












Click it and Unblock the Notifications