ஒப்பந்தத்தை மீறினால் கடும் நடவடிக்கை: பிரபாகரன்
கொழும்பு:
நிரந்தரப் போர்நிறுத்த ஒப்பந்தத்தை மீறுபவர்கள் மீது கடும் நடவடிக்கை எடுக்க விடுதலைப்புலிகளின் தலைவர்பிரபாகரன் உத்தரவிட்டுள்ளதாக அவ்வமைப்பின் அரசியல் ஆலோசகர் ஆன்டன் பாலசிங்கம் கூறியுள்ளார்.
இது குறித்து பாலசிங்கம் சண்டே லீடர் என்ற பத்திரிக்கைக்கு அளித்துள்ள பேட்டியில் கூறியிருப்பதாவது:
ஆயுதங்களை கடத்துதல், ஆட்களை சேர்த்தல், பணம் பறித்தல் போன்ற நடவடிக்கைகளில் விடுதலைப்புலிகள்ஈடுபட்டுள்ளதாக எழுந்த குற்றச்சாட்டு பிரபாகரனை வருத்தமடைய செய்துள்ளது.
இந்த செய்திகள் உண்மையல்ல. ஒப்பந்தத்தை ரத்து செய்ய வேண்டும் என்று நினைக்கும் சிலர் தான் இது போன்றவதந்திகளை கிளப்புகிறார்கள்.
அமைதிப் பேச்சுவார்த்தை நல்லபடியாக முடிய வேண்டும் என்று பிரபாகரன் விரும்புகிறார்.
எனவே இந்த சம்பவங்களில் விடுதலைப்புலிகள் ஈடுபட்டால் அவர்கள் மீது கடுமையான நடவடிக்கை எடுக்குமாறுஅந்தந்த பகுதி தலைவர்களிடம் பிரபாகரன் உத்தரவிட்டுள்ளார் என்று அந்த பத்திரிக்கைக்கு பாலசிங்கம்பேட்டியளித்துள்ளார்.
"இலங்கையில் விரைவில் அமைதி"
இதற்கிடையே இலங்கையில் விரைவில் அமைதி திரும்பும் என்று நம்புவதாக அமெரிக்கா தெரிவித்துள்ளது.
இலங்கையில் பயணம் மேற்கொண்டுள்ள அமெரிக்காவின் வெளியுறவுத் துணைச் செயலாளரான கிறிஸ்டினாரோக்கா, இலங்கையில் இனப் பிரச்சனை தீர்ந்து அமைதி ஏற்படுவதற்கான அனைத்து அறிகுறிகளும்தென்படுவதாகக் கூறினார்.












Click it and Unblock the Notifications