பாகிஸ்தான் சர்ச்சில் வெடிகுண்டு தாக்குதல்: 5 பேர் பலி
இஸ்லாமாபாத்:
பாகிஸ்தான் தலைநகர் இஸ்லாமாபாத்தில் உள்ள ஒரு சர்ச்சில் ஒரு மர்ம நபர் புகுந்து கிரினேட் வெடிகுண்டுவீசியதில் அமெரிக்க தூதரின் மனைவி, மகள் உட்பட 5 பேர் உயிரிழந்தனர்.
இஸ்லாமாபாத்தில் உள்ள இன்டர் நேஷனல் சர்ச் ஒன்றில் வழக்கம் போல் இன்று (ஞாயிற்றுக்கிழமை) பிரார்த்தனைநடைபெற்றது. சுமார் 150 பேருக்கு மேல் இந்த பிரார்த்தனையில் ஈடுபட்டிருந்தனர். பிரார்த்தனையில் ஈடுபட்டஅனைவரும் பிற நாட்டைச் சேர்ந்தவர்கள்.
காலை 10.50 மணிக்கு ஒரு மர்ம நபர் உள்ளே நுழைந்து பிரார்த்தனை செய்து கொண்டிருந்தவர்கள் மீது 4 கிரினேட்வெடிகுண்டுகளை வீசினான். இந்த குண்டுகள் வெடித்ததில் அமெரிக்க தூதரின் மனைவி, மகள் உட்பட 5 பேர்பரிதாபமாக உயிரிழந்தனர்.
மேலும் 45 பேர் படுகாயமடைந்தனர். காயமடைந்தவர்கள் ஆம்புலனஸ் மூலம் மருத்துவமனைக்கு கொண்டுசெல்லப்பட்டனர். பாகிஸ்தானுக்கான இலங்கை தூதர், அவரது மனைவி மற்றும் குழந்தை ஆகியோரும் இந்ததாக்குதலில் காயமடைந்தனர்.
இது குறித்து பாகிஸ்தான் போலீசார் வழக்குப் பதிவு செய்து விசாரித்து வருகின்றனர்.
இந்த தாக்குதலில் 2 அமெரிக்கர்கள் கொல்லப்பட்டுள்ளதாக உறுதி செய்துள்ள அமெரிக்க தூதரகம், அவர்கள்தூதரின் மனைவி மற்றும் மகள்தான் என்பதைத் தெரிவிக்க மறுத்து விட்டது.
இதற்கிடையே இந்த தாக்குதலுக்கு பாகிஸ்தான் ராணுவ ஆட்சியாளர் பர்வேஸ் முஷாரப் கடும் கண்டனம்தெரிவித்துள்ளார்.
கடந்த 5 மாதங்களில் சர்ச் மீது நடந்த 2வது தாக்குதல் இது என்பது குறிப்பிடத்தக்கது. கடந்த அக்டோபர் மாதம்பஞ்சாப்பில் உள்ள பகவல்பூரில் உள்ள சர்ச்சில் நுழைந்த ஒருவன் துப்பாக்கியால் சுட்டதில் 18 பேர்கொல்லப்பட்டனர்.












Click it and Unblock the Notifications