குஜராத்தில் அமைதி
அகமதாபாத்:
2வது முறையாக வன்முறை தாண்டவமாடிய குஜராத் மாநிலத்தில் நேற்று (புதன்கிழமை) இரவிலிருந்து அமைதிநிலவுகிறது.
குஜராத்தில் ரயில் எரிப்பு சம்பவத்தில் 60 பேர் கொல்லப்பட்டதை தொடர்ந்து, அங்கு நடந்த வன்முறையில் 650பேருக்கு மேல் கொல்லப்பட்டனர்.
இதைத் தொடர்ந்து மார்ச் 15ம் தேதி மீண்டும் நடந்த வன்முறை தொடர்பாக இதுவரை 16 பேர் உயிரிழந்துள்ளனர்.
ஆனாலும் நேற்றிரவிலிருந்து எந்த வன்முறையும் இல்லாமல் குஜராத் அமைதியாக இருப்பதாக போலீஸ்அதிகாரிகள் தெரிவித்தனர். இருப்பினும் உள்ள மொடாசா மற்றும் ஹிமத்நகரில் ஊரடங்கு தொடர்ந்து அமலில்உள்ளது.
பரூச்சா மற்றும் பரோடா நகரங்களில் தொடர்ந்து அமைதி நிலவுகிறது. அகமதாபாத்திலும் வன்முறை எதுவும்நடக்கவில்லை என்று செய்திகள் கூறுகின்றன.
இதற்கிடையில் மொடாசா, பரோடா, ஹிமத்நகர் ஆகிய பகுதிகளில் 10ம் வகுப்பு, 12ம் வகுப்பு தேர்வுகள் ரத்துசெய்யப்பட்டுள்ளன.
குஜராத்தில் அமைதி திரும்பியதாக சொல்லப்பட்டாலும், வன்முறையால் தங்கள் வீடுகளை காலி செய்து விட்டுமுகாம்களில் தங்கியிருக்கும் நூற்றுக்கும் மேற்பட்ட மக்கள் இன்னும் முகாம்களிலேயே தங்கியிருக்கிறார்கள்என்பது குறிப்பிடத்தக்கது.
பெங்களூரில் மீண்டும் பதற்றம்:
இதற்கிடையே பெங்களூர்-ஜெகஜீவன்ராம் நகரில் கடந்த சனிக்கிழமை (மார்ச் 16) ஏற்பட்ட திடீர் கலவரத்தில்கத்தியால் குத்தப்பட்டவர் நேற்று இறந்ததால், மீண்டும் அங்கு பதட்டம் உருவாகியுள்ளது.
கத்திக் குத்துப்பட்ட நாகராஜ் (55), ஜான் மருத்துவமனையில் சிகிச்சைக்காக சேர்க்கப்பட்டிருந்தார். ஆனால் சிகிச்சைபலனளிக்காமல் நேற்று காலை 11.30 மணி அளவில் இறந்தார்.
நாகராஜ் இறந்த செய்தியால் ஜெகஜீவன்ராம் நகரில் மீண்டும் பதற்றமான சூழ்நிலை உருவானது.
இதையடுத்து ஜெகஜீவன்ராம் நகரில் மீண்டும் ஊரடங்கு உத்தரவு பிறப்பிக்கப்பட்டது. பதற்றத்தைத் தணிக்கபெங்களூர் நகர கமிஷனர் சாங்கிலியானா தலைமையில் போலீசார் குவிக்கப்பட்டுள்ளனர்.
-
இந்தா ஆரம்பிச்சுட்டாங்கல்ல.. திருச்சி இடை தேர்தலில் திமுகவில் சீட் யாருக்கு! ரேசில் அன்பில் - இனிகோ! -
தவெகவின் முதல் ராஜ்யசபா எம்.பி யார்? 4 பேரில் ஒருவர் பெயரை 'டிக்' அடிக்க ரெடியாகும் விஜய்! -
20 நிமிடம்.. அஜித்குமார் தாயாருக்கு முதல்வர் விஜய் நேரில் அஞ்சலி.. சென்னை வீட்டுக்கு சென்று ஆறுதல் -
"விஜய்" பெயரை யாரும் சொல்லக் கூடாது.. வார்த்தையைவிட்ட துணை சபாநாயகர்.. பத்திரிகையாளர் சொன்ன பதில்! -
திமுகவை தோற்கடித்த 8 அதிர்ச்சி காரணங்கள்.. ஸ்டாலின் மேஜைக்கு போன இறுதி ரிப்போர்ட்.. உள்ளே ஷாக்! -
ஓரம் கட்டப்பட்ட சித்தராமையா.. ஆட்சி அமைக்க டி.கே.சிவகுமாருக்கு ஆளுநர் அழைப்பு! ஆட்டம் ஆரம்பம் -
விஜய் என் வீடு தேடி வந்து எனக்கு துணை முதல்வர் பதவி கொடுத்திருப்பார்! பிரேமலதா பரபரப்பு தகவல் -
என்னை தொட்டிருக்கவே கூடாது.. கோவையில் வேலுமணிக்கு தண்ணி காட்டும் எடப்பாடி.. அடித்து ஆடும் வேலுசாமி -
விஜய்-ஐ அடித்து மேலே வந்த சிவக்குமார்.. லீமா ரோஸ் கொடுத்த ஷாக்! -
கொஞ்சம் அவகாசம் கொடுங்க.. எங்களுக்கு ஓட்டு போட்டதற்கு பெருமையடைய வைப்போம்.. அமைச்சர் ரமேஷ் -
ஒரு 'நாளுக்கு' ரூ.22.63 லட்சம் சம்பளம் வாங்கும் இன்போசிஸ் ஊழியர்.. யாருப்பா அது! -
திருமணம் முதல் அஜித் தாயார் அஞ்சலி வரை! சுப, துக்க நிகழ்வுகளில் மட்டும் விஜய்யுடன் வருகிறாரா த்ரிஷா?












Click it and Unblock the Notifications