சென்னை சிறையில் அல் உம்மா கைதிகள் வன்முறை
சென்னை:
சென்னை மத்திய சிறையில் அடைக்கப்பட்டுள்ள அல் உம்மா கைதிகள், சிறை நிர்வாகத்தை எதிர்த்து நேற்று(புதன்கிழமை) சிறைக்குள்ளேயே திடீர் வன்முறையில் இறங்கினர்.
சென்னை மத்திய சிறையில் பல்வேறு வழக்குகளில் கைதாகியுள்ள அல் உம்மா கைதிகள் அடைக்கப்பட்டுள்ளனர்.இதேபோல அடைக்கப்பட்டிருந்த ஹைதர் அலி மற்றும் இமாம் அலி ஆகியோரை மதுரைக்கு கொண்டுசென்றபோது தப்பிவிட்டனர்.
பின்னர் ஹைதர் அலி மட்டும் மீண்டும் கைது செய்யப்பட்டான். இந்த சம்பவத்தையடுத்து சென்னை சிறையில்உள்ள முஸ்லீம் கைதிகள் குறிப்பாக அல் உம்மா கைதிகளுக்கு பல புதிய கட்டுப்பாடுகள் விதிக்கப்பட்டன.
இந்நிலையில் ஹைதர் அலி சென்னை சிறைக்கு புதன்கிழமை கொண்டு வரப்பட்டன். இதையடுத்து அல் உம்மாகைதிகள் இருந்த அறைகள் அனைத்தும் பூட்டப்பட்டன. அங்கு பலத்த காவல் போடப்பட்டது.
கைதிகள் வெளியே வர அனுமதிக்கப்படவில்லை என்று தெரிகிறது. இதற்கு எதிர்ப்பு தெரிவித்து ராஜா உசேன்என்ற கைதி தலைமையில் அல் உம்மா கைதிகள் பெரும் கலவரத்தில் ஈடுபட்டனர்.
தங்களது சிறை கதவுகளை திறந்து கொண்டு வெளியே வந்த அவர்கள் ஒரு வார்டனைக் கீழே தள்ளி உதைத்தனர்.பின்னர் சிறை நிர்வாகத்தைக் கண்டித்து கோஷமிட்டனர்.
இதையடுத்து மற்ற பகுதிகளில் இருந்த வார்டன்கள், துணை ஜெயிலர் உள்ளிட்டோர் விரைந்து வந்து லேசானதடியடி நடத்தி அல் உம்மா கைதிகளை அடக்கினர். அதன் பிறகு கைதிகள் அனைவரும் அவரவர் செல்களில்அடைக்கப்பட்டனர்.
-
வாட்டி எடுத்த வெயில்! வேலூரில் அதிகபட்சமாக 106°F பதிவு! 15 இடங்களில் செஞ்சுரி! -
Weather: பலத்த இடி, மின்னல், காற்றுடன் 17 மாவட்டங்களுக்கு கனமழை அலெர்ட்! வானிலை மையம் சொல்வதென்ன? -
இர்ஃபானின் ரூ. 3650 பிரியாணியை வறுத்தெடுத்த யூடியூப்பர்.. ப்ளூ சட்டை மாறனுடன் ஒப்பிட்டு கலாய் -
எல்பிஜி சிலிண்டர் பயன்படுத்துபவர்களுக்கு..நாளை முதல் புதிய கட்டுப்பாடுகள்! PNGக்கு மாற்றம் கட்டாயம்? -
வங்கி கணக்கில் வரும் ரூ.3000.. விஜய் அனுப்பும் ஜூன் மாத தொகை.. 3 திட்டங்களில் கிடைக்கும் பணம் -
கப்பு முக்கியம் பிகிலு.. விடாபிடியாய் நிற்கும் விஜய்.. ஓசூர்-க்கு ஜாக்பாட்! -
இந்தா ஆரம்பிச்சுட்டாங்கல்ல.. திருச்சி இடை தேர்தலில் திமுகவில் சீட் யாருக்கு! ரேசில் அன்பில் - இனிகோ! -
Indoor Plants: வீட்டின் காற்றைச் சுத்திகரித்து ஆக்ஸிஜன் அளவை அதிகரிக்கும் இன்டோர் செடிகள்! -
தேசிய அளவில் பலவீனமடையும் பாஜக எதிர்ப்பு.. காங்கிரஸ் செயலால் திட்டத்தை மாற்றும் திமுக! -
திருச்சி கிழக்கு இடைத்தேர்தல்.. தவெக வேட்பாளராக சிரஞ்சீவி? மேடையில் முதல்வர் விஜய் தந்த செம ஹிண்ட் -
"விஜய்" பெயரை யாரும் சொல்லக் கூடாது.. வார்த்தையைவிட்ட துணை சபாநாயகர்.. பத்திரிகையாளர் சொன்ன பதில்! -
திமுகவை தோற்கடித்த 8 அதிர்ச்சி காரணங்கள்.. ஸ்டாலின் மேஜைக்கு போன இறுதி ரிப்போர்ட்.. உள்ளே ஷாக்!












Click it and Unblock the Notifications