தே.ஜ. கூட்டணியில் பிளவு? - இன்று அவசரக் கூட்டம்
டெல்லி:
மத்தியில் ஆளும் பாஜகவின் ஹிந்துத்துவக் கொள்கைகளை தேசிய ஜனநாயகக் கூட்டணியில் உள்ள கட்சிகள்கடுமையாக எதிர்ப்பதையடுத்து, கூட்டணியின் அவசரக் கூட்டம் பிரதமர் வாஜ்பாய் தலைமையில் இன்று(வெள்ளிக்கிழமை) நடைபெறவுள்ளது.
அயோத்தியில் பூமி பூஜை நடத்த அனுமதி தரலாம் என்று கடந்த வாரம் உச்ச நீதிமன்றத்தில் அட்டர்னி ஜெனரல்சோலி சொராப்ஜி தெரிவித்த கருத்து, தே.ஜ. கூட்டணிக் கட்சிகளிடையே பெரும் கோபத்தைத் தூண்டி விட்டது.
ஆனால் அது மத்திய அரசின் கருத்தல்ல, நானாகத்தான் கூறினேன் என்று சொராப்ஜி கூறியதையடுத்து, எதிர்க்கட்சிகள் கொஞ்சம் அடங்கி விட்டன.
இந்நிலையில் குஜராத்தில் சபர்மதி எக்ஸ்பிரஸ் ரயிலுடன் எரிக்கப்பட்ட 58 பேரின் சாம்பலை எடுத்துக் கொண்டுநாடு முழுவதும் யாத்திரை செல்லப் போவதாக, விஸ்வ ஹிந்து பரிஷத் அமைப்பு தற்போது கூறியுள்ளது.
இந்த "சாம்பல் யாத்திரை"க்கு மத்திய அரசு அனுமதி அளிக்கக் கூடாது என்று தே.ஜ. கூட்டணியில் உள்ள கட்சிகள்குரல் எழுப்ப ஆரம்பித்துள்ளன.
இந்த யாத்திரையை மத்திய அரசு தடுக்கவில்லையென்றால், கூட்டணியை வாபஸ் பெறவும் தயங்க மாட்டோம்என்று சமதா மற்றும் திரிணாமூல் காங்கிரஸ் போன்ற கட்சிகள் வெளிப்படையாகவே மிரட்டல் விடுத்துள்ளன.
மேலும் இதுகுறித்து விவாதிப்பதற்காக பாஜக அல்லாத தே.ஜ. கூட்டணிக் கட்சிகள் இன்று முக்கியக் கூட்டத்தைநடத்தப் போவதாக அறிவித்தன.
ஆனால் அதற்குள் தே.ஜ. கூட்டணியின் முக்கியக் கூட்டத்திற்கு வாஜ்பாய் அழைப்பு அழைப்பு விடுத்துள்ளார்.
தே.ஜ. கூட்டணித் தலைவர்களை சமாதானப்படுத்தும் அனைத்து முயற்சிகளையும் இன்றைய கூட்டத்தின்போதுவாஜ்பாய் மேற்கொள்வார் என்று தெரிகிறது.
-
இந்தா ஆரம்பிச்சுட்டாங்கல்ல.. திருச்சி இடை தேர்தலில் திமுகவில் சீட் யாருக்கு! ரேசில் அன்பில் - இனிகோ! -
தவெகவின் முதல் ராஜ்யசபா எம்.பி யார்? 4 பேரில் ஒருவர் பெயரை 'டிக்' அடிக்க ரெடியாகும் விஜய்! -
20 நிமிடம்.. அஜித்குமார் தாயாருக்கு முதல்வர் விஜய் நேரில் அஞ்சலி.. சென்னை வீட்டுக்கு சென்று ஆறுதல் -
"விஜய்" பெயரை யாரும் சொல்லக் கூடாது.. வார்த்தையைவிட்ட துணை சபாநாயகர்.. பத்திரிகையாளர் சொன்ன பதில்! -
திமுகவை தோற்கடித்த 8 அதிர்ச்சி காரணங்கள்.. ஸ்டாலின் மேஜைக்கு போன இறுதி ரிப்போர்ட்.. உள்ளே ஷாக்! -
ஓரம் கட்டப்பட்ட சித்தராமையா.. ஆட்சி அமைக்க டி.கே.சிவகுமாருக்கு ஆளுநர் அழைப்பு! ஆட்டம் ஆரம்பம் -
விஜய் என் வீடு தேடி வந்து எனக்கு துணை முதல்வர் பதவி கொடுத்திருப்பார்! பிரேமலதா பரபரப்பு தகவல் -
என்னை தொட்டிருக்கவே கூடாது.. கோவையில் வேலுமணிக்கு தண்ணி காட்டும் எடப்பாடி.. அடித்து ஆடும் வேலுசாமி -
விஜய்-ஐ அடித்து மேலே வந்த சிவக்குமார்.. லீமா ரோஸ் கொடுத்த ஷாக்! -
கொஞ்சம் அவகாசம் கொடுங்க.. எங்களுக்கு ஓட்டு போட்டதற்கு பெருமையடைய வைப்போம்.. அமைச்சர் ரமேஷ் -
ஒரு 'நாளுக்கு' ரூ.22.63 லட்சம் சம்பளம் வாங்கும் இன்போசிஸ் ஊழியர்.. யாருப்பா அது! -
திருமணம் முதல் அஜித் தாயார் அஞ்சலி வரை! சுப, துக்க நிகழ்வுகளில் மட்டும் விஜய்யுடன் வருகிறாரா த்ரிஷா?












Click it and Unblock the Notifications