கொள்ளையடித்த பணத்தில் கோவில் கட்டிய "காதல்" திருடன்

Subscribe to Oneindia Tamil

சென்னை:

வீடுகளில் புகுந்து கொள்ளையடித்த ஒரு திருடன், தான் திருடிய பணத்தில் ஒரு பகுதியைக் கோவில் கட்டப்பயன்படுத்தியதாக வாக்குமூலம் அளித்துள்ளான்.

சென்னை மற்றும் அதன் புறநகர் பகுதிகளில் உள்ள வீடுகளில் சமீப காலத்தில் அடிக்கடி திருட்டுக்கள் நடந்தன.இதில் லட்சக்கணக்கான பணமும் நகைகளும் கொள்ளையடிக்கப்பட்டன.

இந்தக் கொள்ளைச் சம்பவங்களில் ஈடுபட்டவர்களைப் பிடிப்பதற்காக செங்கல்பட்டு போலீசார் தனிப்படைஅமைத்து, கொள்ளையர்களைத் தேடி வந்தனர்.

இந்நிலையில் காஞ்சிபுரம் மாவட்டம் உத்திரமேரூரை அடுத்துள்ள பழசீவலம் என்ற கிராமத்தைச் சேர்ந்த மன்னாரு(31) என்பவனைப் போலீசார் கைது செய்தனர்.

அவனிடம் விசாரித்த போது அவன் ஒரு அம்மன் பக்தன் என்பதும், அம்மனுக்காக கோவில் கட்டியதும் தெரியவந்தது.

சிறு வயதிலேயே திருட்டுச் சம்பவங்களில் ஈடுபட்ட மன்னாரு, வளர்ந்த பிறகு கைதேர்ந்த திருடனாக மாறினான்.வீடுகளின் பூட்டை உடைத்துத் திருடுவதிலும், ஆட்கள் இருக்கும்போதே வீடுகளுக்குள் நைசாக நுழைந்துதிருடுவதிலும் கில்லாடியாக மாறிய இவன், போலீசாருக்கு பெரும் சவாலாகவே இருந்தான்.

ஒவ்வொரு முறை கொள்ளையடிக்கப் போவதற்கு முன்னரும் அம்மன் கோவிலுக்குச் சென்று பூ போட்டுப் பார்த்து,அதில் சம்மதம் கிடைத்தால்தான் மன்னாரு கொள்ளையடிக்கவே செல்வானாம்.

கொள்ளையடித்த பணத்தில் உத்திரமேரூரில் ரூ.3 லட்சம் செலவில் அம்மனுக்குக் கோவில் கட்டி, அதற்குக்கும்பாபிஷேகத்தையும் மன்னாரு நடத்தினான். தற்போது கூட சைதாப்பேட்டையில் உள்ள மறைமலை நகரில்ரூ.85,000 செலவில் சின்ன கருமாரி அம்மன் என்ற கோவிலை மன்னாரு கட்டி வருகிறான்.

இந்தக் கோவிலுக்காக ஈஞ்சம்பாக்கத்தில் ஒருவரிடம் ரூ.5,000 கொடுத்து அம்மன் சிலையைத் தயார் செய்ய"ஆர்டர்" செய்திருந்தான். அந்தப் பணி முடிவடைவதற்குள்ளாகத்தான் போலீசில் மன்னாரு சிக்கி விட்டான்.

பெண்கள் விஷயத்திலும் "நம்ம" மன்னாரு வீக்காக இருந்துள்ளான். "உனக்கு திருமண ராசியெல்லாம் கிடையாது.ஆனால் பெண்களிடம் நெருக்கமான தொடர்பு ஏற்படும்" என்று ஒரு ஜோசியர் அவனிடம் ஒருமுறை கூறியிருந்தார்.

ஜோசியரின் வாக்கைக் காப்பாற்றியாக (?) வேண்டுமே என்பதற்காக அன்றிலிருந்து திருமண ஆசையையேவிட்டுவிட்டு, பெண்களிடம் "ஜாலியாக" இருக்கத் தொடங்கினான். உல்லாசக் கார்களை வாடகைக்கு எடுத்துக்கொண்டு, சினிமா துணை நடிகைகளை அழைத்துக் கொண்டு உல்லாசமாகப் பொழுது போக்குவானாம்.

மன்னாருவிடமிருந்து போலீசார் சுமார் 100 பவுன் திருட்டு நகைகளைக் கைப்பற்றியுள்ளனர். அவனிடம் மேலும்விசாரணை நடந்து வருகிறது.

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+