48 வயதில் குட்டி போட்ட யானை
Subscribe to Oneindia Tamil
கோயம்புத்தூர்:
கோயம்புத்தூர் மாவட்டம் டாப் சிலிப் மலைப் பகுதியில் 48 வயது யானை குட்டி போட்டு அனைவரையும்ஆச்சரியத்தில் ஆழ்த்தியுள்ளது.
டாப் சிலிப் பகுதியில் இந்திராகாந்தி வனவியல் பூங்கா உள்ளது. இங்கு யானைப் பயிற்சி முகாம் ஒன்றும் உள்ளது.இங்கு உள்ள செல்வி என்ற 48 வயதான யானை சமீபத்தில் கர்ப்பமடைந்தது.
இந்நிலையில் அந்த யானை குட்டி போட்டுள்ளது. நல்ல ஆரோக்கியத்துடன் உள்ள இந்தக் குட்டியையும் சேர்த்துசெல்விக்கு தற்போது 6 யானைக் குட்டிகள் உள்ளன.
48 வயதில் குட்டி போட்ட செல்வியைப் பார்க்க பார்வையாளர்கள் கூட்டம் அலை மோதுகிறது.












Click it and Unblock the Notifications