பாக்.: அமெரிக்க தூதரக அதிகாரிகள் திரும்ப அழைப்பு
வாஷிங்டன்:
பாதுகாப்பு குறைபாடு காரணமாக பாகிஸ்தானில் உள்ள தேவையில்லாத தன்னுடைய தூதரக அதிகாரிகளைஅமெரிக்கா திரும்ப அழைத்துள்ளது.
கடந்த ஞாயிற்றுக்கிழமை பாகிஸ்தானில் உள்ள சர்ச்சில் வெடிகுண்டு வீசப்பட்டு, 2 அமெரிக்கர்கள் உட்பட 5 பேர்உயிரிழந்தனர்.
இதனால் பாகிஸ்தானில் உள்ள அமெரிக்கர்களுக்கு பாதுகாப்பில்லாத சூழ்நிலை உருவாகியுள்ளதாகக் கருதும்அமெரிக்கா, தன்னுடைய தூதரக அதிகாரிகள் சிலரைத் திரும்ப அழைத்துள்ளது.
மேலும் சனி-ஞாயிறு விடுமுறைக்காக இஸ்லாமாபாத், பெஷாவர், லாகூர் மற்றும் கராச்சி ஆகிய 4 நகரங்களிலும்உள்ள அமெரிக்க தூதரக அலுவலகங்கள் மூடப்படும் என்றும் அறிவிக்கப்பட்டுள்ளது.
அவசரத் தேவை என்றால் மட்டுமே அவை திறக்கப்படும் என்று கூறிய அமெரிக்க வெளியுறவுத்துறை செய்தித்தொடர்பாளர் பில் ரீக்கர், ஆனால் திங்கள்கிழமையிலிருந்து இந்த அலுவலகங்கள் வழக்கம்போல செயல்படும்என்றும் கூறினார்.
தூதரக அதிகாரிகளை வாபஸ் பெற்றுக் கொண்டாலும் பாகிஸ்தானுடன் எங்கள் நல்லுறவு தொடரும் என்றும்அங்கு வாழும் அமெரிக்கர்கள் தங்களாகவும் தங்களுடைய பாதுகாப்பை மேம்படுத்திக் கொள்ள வேண்டும்என்றும் ரீக்கர் கூறினார்.












Click it and Unblock the Notifications