சென்னையில் ரூ.12 லட்சம் மதிப்பு தங்கக் கட்டிகள் கொள்ளை

Subscribe to Oneindia Tamil

சென்னை:

சென்னையில் நேற்று (சனிக்கிழமை) இரவு நகைக்கடை அதிபர்களிடமிருந்து ரூ.12 லட்சம் மதிப்பு வாய்ந்த 2கிலோ தங்கக்கட்டிகளை மர்ம கும்பல் கத்தியை காட்டி மிரட்டி பறித்து சென்றுள்ளது.

திருவொற்றியூர் பகுதியைச் சேர்ந்த நகைக்கடை அதிபர்கள் ராகேஷ்குமார் மற்றும் கமலேஷ் ஆகிய இருவரும்சகோதரர்கள்.

இவர்கள் இருவரும் தி.நகரிலிருந்து 2 கிலோ தங்கக்கட்டிகளை எடுத்துக் கொண்டு நேற்றிரவு காரில்திருவொற்றியூருக்கு சென்றனர்.

அப்போது 2 மோட்டார் சைக்கிளில் ஒரு கும்பல் இவர்களை பின் தொடர்ந்துள்ளது. இவர்கள் சென்ற கார் அவர்கள்வீட்டின் அருகில் நின்றவுடன் அந்த கும்பல் அவர்கள் காரின் கண்ணாடியை உடைத்து கத்தியைக் காட்டிமிரட்டியுள்ளது.

தங்க கட்டி வைத்திருந்த பெட்டியை அவர்களிடமிருந்து பறித்துக் கொண்டு கும்பல் தப்பிச் சென்றுள்ளது.இவர்களும் அவர்களை விரட்டிச் செள்ளனர். ஆனாள் ஒரு மோட்டார் சைக்கிளை மட்டும் விட்டுவிட்டு அந்தக்கும்பல் தப்பிச் சென்று விட்டது.

பிறகு இருவரும் போலீசில் புகார் கொடுத்தனர். சென்னை மாநகர போலீஸ் கமிஷனர் விஜயகுமார், வட சென்னைமாவட்ட துணை போலீஸ் கமிஷனர் சைலேந்திரபாபு ஆகியோர் சம்பவ இடத்திற்கு சென்று விசாரணை நடத்திவருகின்றனர்.

சில குற்றவாளிகளின் புகைப்படத்தை நகை அதிபர்களிடம் காட்டி போலீசார் விசாரித்து வருகின்றனர். இந்தச்சம்பவம் தொடர்பாக, சந்தேகத்தின் பேரில் 8 பேரை போலீசார் கைது செய்துள்ளனர்.

இந்த கொள்ளை சம்பவம் அந்த பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+