இலங்கை: 7 ஆண்டுகளுக்குப் பின் நிருபர்களைச் சந்திக்கிறார் பிரபாகரன்

Subscribe to Oneindia Tamil

கொழும்பு:

கடந்த 7 ஆண்டுகளுக்குப் பிறகு வரும் தமிழ்ப் புத்தாண்டு தினத்தன்று முதல் முறையாக நிருபர்களைச்சந்திக்கவுள்ளார் விடுதலைப்புலிகளின் தலைவர் வேலுப்பிள்ளை பிரபாகரன்.

இலங்கை இனப் பிரச்சனைக்குத் தீர்வுகாண அந்நாட்டுப் பிரதமர் ரணில் விக்கிரமசிங்கேயும் பிரபாகரனும் முழுமுயற்சிகளையும் எடுத்து வருகின்றனர். முதற்கட்டமாக இரு தரப்பினர் சார்பிலும் நிரந்தரப் போர்நிறுத்த ஒப்பந்தம்கையெழுத்தாகியுள்ளது.

அடுத்த கட்டமாக எந்த நேரத்திலும் அமைதிப் பேச்சுவார்த்தை தொடங்கலாம் என்ற சூழ்நிலையில், பத்திரிக்கைநிருபர்களைச் சந்திக்க பிரபாகரன் முடிவு செய்துள்ளார்.

இது குறித்து விடுதலைப்புலிகளின் அரசியல் ஆலோசகர் ஆன்டன் பாலசிங்கம் சண்டே லீடர் பத்திரிக்கைக்குஅளித்த பேட்டியில் கூறியிருப்பதாவது:

அமைதிப் பேச்சுவார்த்தையில் விடுதலைப்புலிகளின் நிலை குறித்த நிருபர்களிடம் அவர் நேரடியாகவேபதிலளிப்பார் என்று புலிகளின் அரசியல் ஆலோசகர் ஆன்டன் பாலசிங்கம் கூறியுள்ளார்.

போர்நிறுத்த ஒப்பந்தம் ஏற்பட்டிருக்கும் நிலையில் விடுதலைப்புலிகள் ஆயுதங்கள் கடத்துகிறார்கள், ஆட்களைகடத்தி பணம் பறிக்கிறார்கள் போன்று விடுதலைப்புலிகள் மீது ஏற்பட்டிருக்கும் களங்கம் குறித்தும் பிரபாகரன்விளக்கமளிப்பார்.

புலிகளின் ஆக்கிரமிப்பில் உள்ள கிளிநொச்சி அல்லது மல்லவியில்தான் நிருபர்களைப் பிரபாகரன்சந்திக்கவுள்ளதாகவும் பாலசிங்கம் கூறினார்.

சுமார் ஏழு ஆண்டுகளுக்குப் பிறகு நிருபர்கள் சந்திப்புக்கு முடிவு செய்திருப்பதால், இலங்கையில் குவிந்திருக்கும்உலக செய்தி நிறுவனங்களைச் சேர்ந்த நிருபர்கள், பிரபாகரனைச் சந்திக்க பெரும் ஆவலுடன் உள்ளனர்.

இதற்கிடையே மாலத்தீவு வழியாக நாளை (திங்கள்கிழமை) இலங்கை செல்லும் பாலசிங்கம், நாளையேபிரகாரனைச் சந்திக்கவுள்ளார்.

நார்வே தூதுக்குழுவுவின் தலைவர் எரிக்கும் இலங்கைக்கு புறப்பட்டு சென்றுள்ளார். ஆரம்பக்கட்ட பேச்சுவார்த்தைகுறித்து நார்வே தூதுக்குழுவினரும் பிரபாகரனை சந்தித்து பேசுவார்கள் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+