தலித் பஞ்சாயத்து தேர்தல்: வேட்பு மனு செய்ய கால நீட்டிப்பு கோருகிறார் திருமாவளவன்

Subscribe to Oneindia Tamil

சென்னை:

மதுரை மாவட்டத்தில் நடைபெறவுள்ள பஞ்சாயத்துத் தேர்தலுக்காக வேட்பு மனு செய்வதற்கான கடைசித் தேதியைமேலும் ஒரு வார காலத்திற்கு நீட்டிக்க வேண்டும் என்று விடுதலைச் சிறுத்தைகள் அமைப்பின் தலைவர்திருமாவளவன் கோரியுள்ளார்.

சென்னையில் இன்று (திங்கள்கிழமை) நிருபர்களிடம் திருமாவளவன் கூறியதாவது:

பாப்பாபட்டி, கீரிப்பட்டி மற்றும் நாட்டாமங்கலம் ஆகிய மூன்று தலித் பஞ்சாயத்துத் தொகுதிகளிலும்போட்டியிடுவதற்கு சிலர் தயாராகத்தான் உள்ளனர்.

ஆனாலும் அவர்களை உயர் ஜாதியைச் சேர்ந்த சிலர் வேட்பு மனுக்களைத் தாக்கல் செய்ய விடாமல் மிரட்டிவருகின்றனர்.

அதிமுக கட்சியைச் சேர்ந்த சுப்பன் என்பவர்கூட தற்போது சென்னை வந்துள்ளார். பாப்பாபட்டியில் போட்டியிடப்போகும் அவர், தனக்கு பாதுகாப்பு வேண்டும் என்று முதல்வர் ஜெயலலிதாவிடம் வேண்டுகோள்விடுப்பதற்காகவே இங்கு வந்துள்ளார்.

சுப்பனைப் போலவே மற்ற வேட்பாளர்களும் தங்கள் வேட்பு மனுக்களைத் தாக்கல் செய்வதற்கு வசதியாக தமிழகஅரசு அவர்களுக்குத் தகுந்த பாதுகாப்பு அளிக்க வேண்டும்.

மேலும் வேட்பு மனுத்தாக்கல் செய்வதற்கு இன்றும் இரண்டு நாட்களே இருக்கும் நிலையில், மனுத்தாக்கள்செய்வதற்கான கடைசி நாளை மேலும் ஒரு வாரத்திற்கு நீட்டிக்க வேண்டும் என்றார் திருமாவளவன்.

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+