ஹெல்மட் அணிவதை கட்டாயமாக்க அரசு பரிசீலனை
சென்னை:
தமிழகத்தில் பெருகி வரும் சாலை விபத்துக்களைத் தடுக்க ஸ்கூட்டர் மற்றும் மோட்டார் சைக்கிள் ஓட்டுபவர்கள்கட்டாயம் ஹெல்மட் அணிய வேண்டும் என்று சட்டம் கொண்டு வருவது குறித்து தமிழக அரசு பரிசீலித்துவருகிறது.
சமீபகாலமாக தமிழகத்தில் சாலை விபத்துக்கள் அதிகமாகிக் கொண்டு வருகின்றன. சாலைப் பாதுகாப்புக் குறித்துஅரசு தீவிர நடவடிக்கை எடுத்து வருகிறது.
தொடர் சாலை விபத்துக்கு என்ன காரணம்? விபத்துக்களை தடுக்க என்னென்ன நடவடிக்கைகள் எடுக்கலாம்?இவை குறித்து, அதிகாரிகளை அழைத்து முதல்வர் ஜெயலலிதா ஆலோசனை நடத்தி வருகிறார்.
அதிக வேகத்தில் ஓட்டுவது, மிகப் பழைய வாகனங்கள், இரவில் களைப்போடு, தூக்க கலக்கத்தோடு ஓட்டுவது,சாலை விதிகளை மீறல் , வழுக்கலான டயர்களோடு வாகனத்தை ஓட்டுதல் போன்ற பல காரணங்கள் விபத்துக்கானகாரணங்களாக கண்டறியப்பட்டுள்ளன.
இந்த காரணங்களை எல்லாம் நிவர்த்தி செய்ய அதிகாரிகள் நடவடிக்கை எடுத்து வருகின்றனர். மேலும் ஸ்கூட்டர்,மோட்டார் சைக்கிள் ஓட்டுபவர்கள் விபத்துக்குள்ளாகும் போது பெரும்பாலும் தலையில் அடிப்பட்டேஇறக்கிறார்கள்.
இதனால் ஹெல்மட் அணிவதை கட்டாயமாக்கலாமா என்பது குறித்தும் அரசு தீவிரமாக ஆலோசனை நடத்திவருகிறது.
சாலை விபத்துக்களைத் தடுக்கும் புதிய அறிவுப்புகள், பாதிக்கப்பட்டவர்களுக்கு உடனடி சிகிச்சைக்கான புதியஅறிவிப்புகளை பட்ஜெட்டில் அல்லது போக்குவரத்துத்துறை மானியக் கோரிக்கையில், ஜெயலலிதா அறிவிப்பார்என எதிர்பார்க்கப்படுகிறது.
-
எல்பிஜி சிலிண்டர் பயன்படுத்துபவர்களுக்கு..நாளை முதல் புதிய கட்டுப்பாடுகள்! PNGக்கு மாற்றம் கட்டாயம்? -
இந்தா ஆரம்பிச்சுட்டாங்கல்ல.. திருச்சி இடை தேர்தலில் திமுகவில் சீட் யாருக்கு! ரேசில் அன்பில் - இனிகோ! -
தவெகவின் முதல் ராஜ்யசபா எம்.பி யார்? 4 பேரில் ஒருவர் பெயரை 'டிக்' அடிக்க ரெடியாகும் விஜய்! -
20 நிமிடம்.. அஜித்குமார் தாயாருக்கு முதல்வர் விஜய் நேரில் அஞ்சலி.. சென்னை வீட்டுக்கு சென்று ஆறுதல் -
"விஜய்" பெயரை யாரும் சொல்லக் கூடாது.. வார்த்தையைவிட்ட துணை சபாநாயகர்.. பத்திரிகையாளர் சொன்ன பதில்! -
திமுகவை தோற்கடித்த 8 அதிர்ச்சி காரணங்கள்.. ஸ்டாலின் மேஜைக்கு போன இறுதி ரிப்போர்ட்.. உள்ளே ஷாக்! -
ஓரம் கட்டப்பட்ட சித்தராமையா.. ஆட்சி அமைக்க டி.கே.சிவகுமாருக்கு ஆளுநர் அழைப்பு! ஆட்டம் ஆரம்பம் -
விஜய் என் வீடு தேடி வந்து எனக்கு துணை முதல்வர் பதவி கொடுத்திருப்பார்! பிரேமலதா பரபரப்பு தகவல் -
என்னை தொட்டிருக்கவே கூடாது.. கோவையில் வேலுமணிக்கு தண்ணி காட்டும் எடப்பாடி.. அடித்து ஆடும் வேலுசாமி -
விஜய்-ஐ அடித்து மேலே வந்த சிவக்குமார்.. லீமா ரோஸ் கொடுத்த ஷாக்! -
கொஞ்சம் அவகாசம் கொடுங்க.. எங்களுக்கு ஓட்டு போட்டதற்கு பெருமையடைய வைப்போம்.. அமைச்சர் ரமேஷ் -
ஒரு 'நாளுக்கு' ரூ.22.63 லட்சம் சம்பளம் வாங்கும் இன்போசிஸ் ஊழியர்.. யாருப்பா அது!












Click it and Unblock the Notifications