எல்லையில் கடைகளைத் திறந்தால் தீவிரவாதம் குறையும்: அப்துல் கலாம் யோசனை

Subscribe to Oneindia Tamil

கோயம்புத்தூர்:

இந்தியாவின் எல்லைப் பகுதிகளில் நிறையக் கடைகளையும் வணிக நிறுவனங்களையும் நிறையத் திறந்தால்,பாகிஸ்தானின் எல்லை தாண்டிய பயங்கரவாதம் தானாகக் குறையும் என்று பிரபல அணு விஞ்ஞானியும் இந்தியப்பிரதமரின் முன்னாள் அறிவியல் ஆலோசகருமான அப்துல் கலாம் கூறினார்.

கோயம்புத்தூரில் உள்ள ஒரு தனியார் தொழில்நுட்பக் கல்வி நிறுவனத்தில் இன்று (செவ்வாய்க்கிழமை)மாணவர்களின் கேள்விகளுக்குப் பதிலளிக்கையில் கலாம் கூறியதாவது:

இந்திய-பாகிஸ்தான் மோதல்களைப் பற்றி அரசியல் ரீதியாகவெல்லாம் எனக்குப் பதில் சொல்லத் தெரியாது. அதில்நான் தேர்ந்தவனும் கிடையாது.

ஆனால் எல்லைப் பகுதிகளை முழுவதும் கடைகள் மற்றும் வணிக நிறுவனங்களால் நிரப்பி விட்டுப் பாருங்கள்.பின்னர் அங்கு வரும் மக்கள் கூட்டத்தைக் கண்டு அப்பகுதிகளில் தீவிரவாதிகள் வருவது குறைந்து விடும்;தீவிரவாதமும் குறைந்து விடும்.

அதேபோல் இந்தியாவை வளர்ந்த நாடாக மாற்றுவதற்கு ஒரே வழி, நாட்டிலுள்ள நதிகள் அனைத்தையும்இணைப்பதுதான். பிரிட்டிஷ் நாட்டினர் ரயில்வே மூலம் தங்கள் நாட்டை இணைத்ததுபோல, நாமும் நதிகளைஇணைத்தால்தான் நம் நாடு சமூக ரீதியாகவும் பொருளாதார ரீதியாகவும் முன்னேறும். வளர்ந்த நாடாகவும் மாறும்.

ஆனால் இவற்றைச் செயல்படுத்துவதற்கு யான் முன் வருவது என்றுதான் தெரியவில்லை.

வேலை தேடிக் கொண்டு ஏராளமான இளைஞர்கள் நம் நாட்டிலிருந்து வெளிநாடுகளுக்கு இடம் பெயர்ந்துகொண்டிருப்பதைப் பற்றி நாம் கவலைப்படத் தேவையில்லை. ஒவ்வொரு ஆண்டும் புத்திசாலியான மாணவர்கள்அதிக அளவில் வெளிவந்து கொண்டுதான் உள்ளனர்.

ஆனாலும் ஆராய்ச்சியைப் பொறுத்த அளவில், நம் நாட்டில் தரம் வாய்ந்த ஆய்வகங்களை இன்னும் அதிகமாகஏற்படுத்த வேண்டிய நிலையில்தான் உள்ளோம்.

ஆய்வகங்களின் தரத்தை உயர்த்தினால்தானே வெளிநாடுகளிலிருந்து ஆராய்ச்சியாளர்கள் இங்கு வந்து வேலைசெய்வார்கள்? நாட்டிலுள்ள தொழிலதிபர்கள்தான் இதற்கு முன்வர வேண்டும்.

விரைவில் விண்ணில் பாயவுள்ள ஜி.எஸ்.எல்.வி. ராக்கெட்டில் முழுக்க முழுக்க நம் நாட்டிலேயே தயாரானகிரையோஜெனிக் என்ஜின்தான் பயன்படுத்தப்படவுள்ளது என்று கலாம் பேசினார்.

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+