மஞ்சள் வியாபாரி வீட்டில் நகை-பணம் கொள்ளை: ஈரோட்டில் பெரும் பரபரப்பு
ஈரோடு:
ஈரோட்டில் உள்ள ஒரு மஞ்சள் வியாபாரியின் வீட்டிலுள்ளவர்களைக் கட்டிப் போட்டு நகை மற்றும் பணத்தைக்கொள்ளையடித்துச் சென்றவர்களைப் போலீசார் தேடி வருகின்றனர்.
ஈரோடு அரசு மருத்துவமனை அருகில் மஞ்சள் வியாபாரியான சங்கர் என்பவரின் வீடு உள்ளது.
சங்கருடைய வீட்டில் ஒரு கும்பல் துப்பாக்கியுடன் திடீரென்று நுழைந்து, அங்கிருந்த ஆறு பேரையும் அந்தக் கும்பல்கட்டிப் போட்டது.
பின்னர் பீரோவிலிருந்து நகைகள் மற்றும் பணத்தைக் கொள்ளையடித்துக் கொண்டு அந்தக் கும்பல்வெளியேறியது. இவற்றின் மதிப்பு பல லட்சங்கள் இருக்கும் என்று கூறப்படுகிறது.
இத்தோடு நில்லாமல் வீட்டு வாசலில் நின்று கொண்டிருந்த சங்கருடைய காரையும் எடுத்துக் கொண்டு அந்தக்கொள்ளைக் கும்பல் தப்பி விட்டது.
இச்சம்பவம் ஈரோடு நகரில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
இதற்கிடையே காங்கேயத்தில் உள்ள ராம்குமார் மன்றாடியார் என்பவருடைய பண்ணை வீட்டில் ஒரு கும்பல்நுழைந்து, துப்பாக்கியைக் காட்டி கொள்ளையடிக்க முயற்சித்தது.
ஆனால் மன்றாடியார் தன்னுடைய துப்பாக்கியால் அந்தக் கொள்ளையர்களை நோக்கிச் சுட ஆரம்பித்ததும்,அவர்கள் தப்பித்து ஓடி விட்டனர்.












Click it and Unblock the Notifications