17 ஆண்டுகளுக்கு பிறகு இ-மெயில் மூலம் பெற்றோரை கண்டுபிடித்த பெல்ஜியம் தமிழர்
சென்னை:
தன்னுடைய 7 வயதில் சென்னையிலிருந்து பெல்ஜியம் சென்றவர், 17 ஆண்டுகளுக்குப் பிறகு தன் பெற்றோரைஇ-மெயில் மூலம் கண்டு பிடித்தார்.
கடந்த 1985ம் ஆண்டு சென்னையில் பெற்றோரை விட்டு பிரிந்து 1987ம் ஆண்டு பெல்ஜியம் நாட்டு தம்பதியால்தத்து எடுக்கப்பட்டு பெல்ஜியம் சென்றவர் வரதராஜ்.
பெல்ஜியத்தில் தற்போது வரதராஜ் கம்ப்யூட்டர் இன்ஜினியரிங் படிப்பை முடித்துள்ளார். சொந்தமாக கம்ப்யூட்டர்தொடர்பான தொழிலும், மேலும் வீட்டிலேயே பிட்சா உ ணவகம் ஒன்றையும் நடத்தி வரும் அவர், அங்கு பெரும்கோடீஸ்வரராக உள்ளார்.
வரதராஜ் கடந்த சில நாட்களுக்கு முன்பு சென்னை நகர போலீஸ் கமிஷனர் அலுவலகத்திற்கும், தன்னை தத்துகொடுத்த மெட்ராஸ் சோசியல் சர்வீஸ் கில்டுக்கும் தனது பெற்றோரை கண்டு பிடித்து தருமாறு இ-மெயில் மூலம்தகவல் அனுப்பி இருந்தார்.
போலீசாரும், சமூக சேவை அமைப்பினரும் தீவிர முயற்சிகளை மேற்கொண்டு வரதராஜின் பெற்றோரைக்கண்டுபிடித்தனர். அவரது தந்தை லட்சுமிபதி, தாய் கலா. தற்போது இருவரும் பிரிந்து விட்டனர்.
லட்சுமிபதி சென்னையில் லாட்டரி சீட்டு விற்று வருகிறார். கலா வீட்டு வேலை செய்து வருகிறார்.
வரதராஜைத் தத்தெடுத்த வளர்த்த டிகொனிக் சமீபத்தில் இறந்து விட்டார். தற்போது தான் தங்கியிருக்கும்பெல்ஜியம்-மோன்ஸ் நகரில் சொந்தமாக வீடு கட்டி வருகிறார் அவர்.
வீடு கட்டும் வேலை முடிந்ததும் தனது பெற்றோர்களை பார்க்க ஆகஸ்டு மாதம் சென்னை வரத் திட்டமிட்டுள்ளார்வரதராஜ்.












Click it and Unblock the Notifications