பாஜக அலுவலகத்தை சூறையாடிய 6 அதிமுகவினர் டிஸ்மிஸ்
சென்னை:
சென்னையில் உள்ள பாஜக அலுவலத்தை சூறையாடிய ஆறு அதிமுகவினரை கட்சியிலிருந்து நீக்கியிருப்பதாகஅக்கட்சியின் பொதுச் செயலாளரும் தமிழக முதல்வருமான ஜெயலலிதா இன்று (திங்கள்கிழமை) கூறினார்.
சமீபத்தில் பாஜகவிலிருந்து விலகி அதிமுகவில் சேர்ந்த சுந்தரம் என்பவர் தலைமையில் சில அதிமுகவினர் கடந்தசனிக்கிழமை இரவு மத்திய சென்னை மாவட்ட பாஜக அலுவலத்தைத் தாக்கினர்.
பின்னர் அங்கிருந்த மேஜை, நாற்காலி, கண்ணாடி ஜன்னல் உள்பட பல பொருள்களையும் அடித்து நொறுக்கினர்.பின்னர் அங்கிருந்த டிவியையும் சுமார் 50 பிளாஸ்டிக் சேர்களையும் அள்ளிக் கொண்டு அந்தக் கும்பல் சென்றுவிட்டது.
அங்கிருந்த பிரதமர் வாஜ்பாய் மற்றும் உள்துறை அமைச்சர் ஆகியோரின் புகைப்படங்களை அகற்றிவிட்டு,ஜெயலலிதாவின் புகைப்படத்தை மாட்டி, அதிமுகவின் கொடியை ஏற்றி, அந்த அலுவலகத்தைக் கைப்பற்றவும்அவர்கள் முயற்சித்ததாக பாஜகவினர் புகார் கூறினர்.
இச்சம்பவம் குறித்து தமிழக சட்டசபையில் இன்று பேசிய ஜெயலலிதா, பாஜக அலுவலகத்தை சூறையாடிய ஆறுஅதிமுகவினரும் கட்சியிலிருந்து நீக்கப்பட்டுள்ளதாகத் தெரிவித்தார்.
சுந்தரம் தவிர இச்சம்பவத்தில் தொடர்புடைய மகிழன்பன், உதயகுமார், மாரிமுத்து, ராஜாபாதர் மற்றும் குபேரன்ஆகிய இந்த பேரும் கட்சியின் அடிப்படை உறுப்பினர் பதவியிலிருந்து அனைத்து பொறுப்புகளிலுமிருந்தும்நீக்கப்பட்டுள்ளனர் என்றும் ஜெயலலிதா கூறினார்.
இச்சம்பவத்தைக் கடுமையாகக் கண்டித்த ஜெயலலிதா, அதிமுக தொண்டர்கள் யாரும் இதுபோன்ற செயல்களில்ஈடுபட்டால் அவர்கள் மீது கடும் நடவடிக்கை எடுக்கப்படும் என்றும் எச்சரித்தார்.
இது தொடர்பாக கடும் நடவடிக்கை எடுக்கப்பட வேண்டும் என்று போலீசாருக்கு உத்தரவிடப்பட்டுள்ளதாகவும்ஜெயலலிதா சட்டசபையில் கூறினார்.












Click it and Unblock the Notifications