திமுகதான் சட்டம்-ஒழுங்கை கெடுக்கிறது: ஜெ. பாய்ச்சல்
சென்னை:
தமிழகத்தில் திமுகவினர்தான் சட்டம்-ஒழுங்கை சீர் குலைத்து வருகின்றனர் என்று சட்டசபையில் முதல்வர்ஜெயலலிதா குற்றம் சாட்டியுனார்.
பட்ஜெட் மீதான விவாதம் இன்று (திங்கள்கிழமை) சட்டசபையில் நடந்தது. அப்போது, தமிழகத்தில் பிராந்திகடைகளில் பார்களை அனுமதித்தால், சட்டம்-ஒழுங்கு சீர்குலையும் என்று திமுக எம்.எல்.ஏ. புகழேந்தி கூறினார்.
உடனே குறுக்கிட்டு பேசிய ஜெயலலிதா, பார்களை அனுமதித்தால் சட்டம், ஒழுங்கு சீர்குலையும் என்று யாரும்கூறவில்லை. திமுக மட்டும் தான் இது போல் கூறிவருகிறது.
தமிழக அரசின் முடிவுகளை எதிர்ப்பதன் மூலம், சட்டம்-ஒழுங்கை சீர்குலைக்க திமுகதான் விரும்புகிறது என்றுகூறினார்.
இதை எதிர்த்து திமுக எம்.எல்.ஏக்கள் எதிர்ப்பு கோஷம் எழுப்பினர். முதல்வர் இப்படி குற்றம் சாட்டுவது, அரசைஎதிர்த்து குரல் எழுப்புவர்களின் குரல்வளையை நெறிப்பது போல் உள்ளது என்று சட்டசபை எதிர்க்கட்சி தலைவர்அன்பழகன் கூறினார்.
இதனால் சிறிது நேரம் சட்டசபையில் கூச்சலும், குழப்பமும் ஏற்பட்டது.












Click it and Unblock the Notifications