ஹலோ !
Subscribe to Oneindia Tamil
சென்னை:
நூற்றுக்கணக்கான பத்திரிக்கையாளர்கள் முன்னிலையில் கேமரா பிளாஷ்கள் பளபளக்க பிரதமர் வாஜ்பாயுடன்தொலைபேசியில பேசினார் முதல்வர் ஜெயலலிதா.
இந்தியாவில் முதல்முறையாக தனியார் தொலைபேசி சேவை இன்று அறிமுகப்படுத்தப்பட்டது. பாரதி டெலிநெட்நிறுவனம் இந்தச் சேவையை தொடங்கியுள்ளது.
இந்தச் சேவையை முதல்வர் ஜெயலலிதா சென்னையில் இன்று துவக்கி வைத்து இந்தச் சேவையைப் பயன்படுத்திமுதன்முதலாக பிரதமர் வாஜ்பாயுடன் பேசினார்.
ஹலோ... மிஸ்டர் பிரைம் மினிஸ்டர்.. என்று ஜெயலலிதா அழைக்க.. ஜெயலலிதாவிடம் நலம் விசாரித்தார்வாஜ்பாய். இருவரும் பரஸ்பரம் வணக்கங்களைத் தெரிவித்துக் கொண்டனர்.
பின்னர் தனது நேரத்தை ஒதுக்கி தன்னுடன் பேசியதற்கு பிரதமருக்கு ஜெயலலிதா நன்றி தெரிவித்துக் கொண்டார்.












Click it and Unblock the Notifications