அதிமுக- திமுக இடையே சண்டை மூட்டிவிட்ட காங்கிரஸ்

Subscribe to Oneindia Tamil

சென்னை:

சட்டசபையில் அதிமுகவினருக்கும் திமுகவினருக்கும் இடையே காங்கிரஸ் உறுப்பினர் போளூர் வரதன் சண்டைமூட்டிவிட்டார்.

இவர் முதல்வர் ஜெயலலிதாவின் தீவிர ஆதரவாளர் என்பது குறிப்பிடத்தக்கது. சட்டசபையில் காங்கிரஸ் கட்சியைஉடைக்க இவர் மூலமாக அதிமுக முயன்று வருகிறது.

இந் நிலையில் பட்ஜெட் மீதான விவாதம் நடந்து கொண்டிருந்தபோது பேசிய போளூர் வரதன்,முதல்வர் ஜெயலலிதாவின் தயவினால் தான் நான் இரண்டு முறை எம்.எல்.ஏ. ஆகி இருக்கிறேன். எனக்கு சீட்கொடுத்தது சோனியா காந்தி. ஆனால், ஜெயித்தது ஜெயலலிதாவினால் தான். சிலர் (கருணாநிதி) தங்களைதாழ்த்தப்பட்டவர்களின் பிரதிநிதி என்று கூறிக் கொள்கின்றனர். ஆனால், தாழ்த்தப்பட்டவர்கள் வளர்ச்சிக்குஒதுக்கப்பட்ட நிதியை வேறு திட்டங்களுக்கு பயன்படுத்தினார்கள்.

ஆனால், தாழ்த்தப்பட்ட மாணவிகளுக்கு ஜெயலலிதா சைக்கிள் வழங்கினால் அதில் ஊழல் நடந்திருப்பதாகபேசுகிறார்கள் என்றார்.

இவரது பேச்சால் ஆத்திரமடைந்த திமுகவினர் அவருடன் கடும் வாக்குவாதத்தில் ஈடுபட்டனர்.

திமுக முன்னாள் அமைச்சர் பன்னீர்செல்வம் கையை நீட்டி வரதனைப் பார்த்துத் திட்டினார்.

இதற்ககு வரதனும் கடும் சொற்களால் திமுகவினரைத் திட்டினார். அவருக்கு ஆதரவாக அதிமுகவினரும் சத்தம்போட்டனர். இதனால் திமுகவினருக்கும் அதிமுகவினருக்கும் இடையே மோதல் ஏற்பட்டது. அவையில் கூச்சல் குழப்பம் நிலவியது.

இந்த வாக்குவாதம் ஜெயலலிதாவுக்கும் அன்பழகனுக்கும் இடையிலான மோதலாக மாறியது.

ஆனாலும் வரதன் தொடர்ந்து திமுகவுக்கு எதிராக பேசிக் கொண்டிந்தார். கடந்த ஆட்சியில் அமைச்சராக இருந்தபொன்முடி கோடிக்கணக்கில் ஊழல் செய்ததாகக் கூறினார்.

அவருக்கு பொன்முடியும் பதில் தந்து கொண்டிருந்தார்.

இருவரும் ஒருவரை ஒருவர் கடும் சொற்களால் திட்டிக் கொண்டிருக்க, இடைமறித்த சபாநாயகர் காளிமுத்து,நீங்கள் ரெண்டு பேரும் லாவணிக் கச்சேரி நடத்திக் கொண்டிருக்கிறீர்கள். இத்துடன் இந்தப் பிரச்சனையைவிட்டுவிட்டு இருவரும் அமருங்கள் என்றார்.

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+