தமிழகத்தில் மினி எமர்ஜென்சி: பத்திரிக்கைகளை வாரும் கருணாநிதி
சென்னை:
தமிழகத்தில் மினி எமர்ஜென்சி அமலில் உள்ளதாக திமுக தலைவர் கருணாநிதி குற்றம் சாட்டியுள்ளார்.
அவர் வெளியிட்டுள்ள அறிக்கை விவரம்:
தமிழகத்தில் அரிசி, கோதுமை போன்ற உணவுப் பொருள்களுக்கு வரி விதிக்கப்பட்டுள்ளது. இதைக் கண்டித்துசட்டசபையில் பேசும் திமுக எம்.எல்.ஏக்களை முதல்வர் ஜெயலலிதா வாய்க்கு வந்தபடி விமர்சித்து வருகிறார்.
இதன்மூலம் இந்த வரிவிதிப்பை நியாயப்படுத்திவிட முடியாது என்பதை அவர் புரிந்து கொள்ள வேண்டும்.
ஏழைகள், தொழிலாளர்கள், அரசு ஊழியர்களின் கோரிக்கைகளைக் கண்டுகொள்ளாமல் இருந்து வரும்ஜெயலலிதா, குடிகாரர்களின் கோரிக்கையை ஏற்று பார் திறக்க முன்வந்துள்ளார்.
இதன் மூலமே இந்த அரசு எப்படிப்பட்டது என்பது அனைவருக்கும் புரிந்துவிட்டது.
ஆனால், இது தொடர்பாக சட்டசபையில் நடக்கும் விவாதங்களில் திமுகவினர் பேசுவதை பத்திரிக்கைகள்நியாயமாக வெளியிடவில்லை. இதற்கு பத்திரிக்கைகளை மட்டும் நாம் குறைகூறிவிட முடியாது.
காரணம், தமிழகத்தில் மினி எமர்ஜென்சி அமலில் இருக்கிறது.
இவ்வாறு கருணாநிதி தனது அறிக்கையில் கூறியுள்ளார்.
பத்திரிக்கைகளில் திமுக எம்.எல்.ஏக்கள் பேசியதற்கு ஜெயலலிதா அளித்த பதில் தான் கொட்டை எழுத்துக்களில்வெளியாகியுள்ளது. இதனால் கடுப்படைந்துள்ள கருணாநிதி பத்திரிக்கைகளை நேரடியாகத் தாக்காமல் இவ்வாறுகூறியுள்ளதாகத் தெரிகிறது.
எமர்ஜென்சி போன்ற ஒரு நிலையில் பத்திரிக்கைகள் பயந்து போய் செய்திகள் வெளியிடுவதாக அவர்கூறியுள்ளார்.












Click it and Unblock the Notifications