5 பேர் உயிருடன் எரித்துக் கொலை: துப்பாக்கிச் சூடு
அகமதாபாத்:
குஜராத்தில் தலைவிரித்தாடும் வன்முறைக்கு ஒரே குடும்பத்தைச் சேர்ந்த 5 பேர் உயிரிழந்தனர்.
இதையடுத்து குஜராத் முழுவதும் நேற்றிரவு பெரும் வன்முறை வெடித்தது. அகமதாபாத்தில் போலீசாருக்கும்கலவரக்காரர்களுக்கும் இடையே நேற்றிரவு முழுவதும் சண்டை நடந்தது.
இதையடுத்து போலீசார் துப்பாக்கிச் சூடு நடத்தினர். இதில் ஒருவர் இறந்தார். நாளை பிரதமர் வாஜ்பாய் இம்மாநிலத்துக்கு வரவுள்ள நிலையில் புதிய வன்முறைகளால் குஜராத் கலங்கிப் போய் இருக்கிறது.
அகமதாபாத்தில் இருந்து 75 கி.மீ. தூரத்தில் உள்ள அபாசா என்ற கிராமத்தில் நேற்று ஒரு வீட்டை வெளியில்இருந்து பூட்டிய வன்முறைக் கும்பல் அந்த வீட்டுக்கு தீ வைத்தது. இதில் வீட்டில் இருந்த 5 பேர் உடல் கருகிஇறந்தனர்.
வீட்டை பூட்டியதால் அவர்கள் வெளியில் வரமுடியாமல் அலறி, உடல் வெந்து இறந்தனர். இதைத் தொடர்ந்துவன்முறை தீவிரமடைந்துள்ளது.
இந்த மாநிலத்தில் கடந்த ஒரு மாதத்துக்கும் மேலாக நடந்து வரும் வன்முறையைக் கட்டுப்படுத்த முடியாமல் மாநிலபா.ஜ.க. அரசு திண்டாடி வருகிறது. அம் மாநில அரசின் மீது நடவடிக்கை எடுக்காமல் மத்திய அரசு வேடிக்கைபாரித்துக் கொண்டுள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.
வன்முறையில் ஈடுபட்ட கும்பல்களுக்கு போலீசாரே உதவியாகவும் இருந்து வருவதால் தான் வன்முறை தொடர்ந்துகொண்டுள்ளதாகத் தெரிகிறது. நியாயமாக செயல்பட்ட பல போலீஸ் அதிகாரிகளை மாநில அரசு மாற்றியதும்நினைவுகூறத்தக்கது.
நேற்று வீட்டில் தீ வைத்து 5 பேர் எரித்துக் கொல்லப்பட்டதை போலீசார் தீ விபத்து என்று வழக்குப் பதிவுசெய்துள்ளதாகக் கூறப்படுகிறது.
இதற்கு கடும் எதிர்ப்புக் கிளம்பியுள்ளது.
மாநிலத்தின் பல்வேறு மாவட்டங்களிலும் இன்னும் ஊரடங்கு உத்தரவு அமலில் உள்ளது.
நாளை வாஜ்பாய் பயணம்:
இந் நிலையில் பிரதமர் வாஜ்பாய் நாளை குஜராத் செல்கிறார். முதல்வர் மோடி மற்றும் அனைத்துக் கடிசித்தலைவர்களுடன் ஆலோசனை நடத்துகிறார்.
காந்திநகரில் அமைக்கப்பட்டுள்ள நிவாரண முகாம்களில் தங்கியுள்ள மக்களையும் அவர் சந்திக்கிறார்.












Click it and Unblock the Notifications