இமாம் அலியை ரயில், பஸ், கார், லாட்ஜ், காடுகளில் தேடும் தமிழக போலீஸ்

Subscribe to Oneindia Tamil

ஆண்டிமடம்:

போலீஸ் காவலில் இருந்து சினிமா ஸ்டைலில் தப்பிச் சென்ற அல்-உம்மா தீவிரவாதி இமாம் அலிஜெயங்கொண்டம் பகுதியில் உள்ள முந்திரிக் காட்டில் தலைமறைவாக இருப்பதாக தகவல் கிடைத்ததையடுத்துஅங்கு போலீசார் குவிக்கப்பட்டுள்ளனர்.

அந்த வறண்ட முள்காட்டுப் பகுதியில் தீவிர சோதனை நடத்தப்பட்டு வருகிறது.

இமாம் அலியை தேடும் பணி தமிழகம் முழுவதும் இரவு பகலாக நடந்து வருகிறது. சில தினங்களுக்கு முன்சென்னையில் இருந்து மதுரை சென்று கொண்டிருந்த ரயிலை பாண்டியன் எக்ஸ்பிரஸ் நிறுத்தி சோதனையிட்டனர்.

பெங்களூர்- தூத்துக்குடி எக்ஸ்பிரஸ் ரயிலில் கூட அடிக்கடி சோதனை நடத்தப்பட்டு வருகிறது.

தமிழகம் முழுவதுமே முக்கிய நெடுஞ்சாலைகளில் போலீஸார் தடுப்புகளை ஏற்படுத்தி வாகனங்களைசோதனையிட்டு வருகின்றனர்.

குறிப்பாக பிற மாநிலங்களுக்குச் செல்லும் ஆம்னி பஸ்கள், சந்தேகத்திற்கிடமாக செல்லும் கார்கள் ஆகியவைசோதனைக்கு உள்ளாக்கப்படுகின்றன.

வெடிகுண்டுகளைத் தயாரிப்பதில் இவன் படும் கில்லாடி என்பதால் இவனை எப்படியாவது பிடித்துவிட வேண்டும்என மத்திய, மாநில அரசுகள் தீவிர முயற்சிகள் மேற்கொண்டுள்ளன.

குஜராத்தில் சிறுபான்மையினர் மீது தாக்குதல் நடந்து வருவதால் அம் மாநிலத்தில் கடும் தாக்குதல் நடத்த பலதீவிரவாத இயக்கங்களும் திட்டமிட்டுள்ளதாக மத்திய உளவுப் பிரிவுக்கு தகவல் கிடைத்துள்ளது.

அம் மாநில முதல்வர் நரேந்திர மோடியைத் தீர்த்துக் கட்ட தீவிரவாத இயக்கங்களுக்கு தாவூத் இப்ராகிம்உத்தரவிட்டுள்ளதாகத் தெரியவந்துள்ளது.

இந்த இயக்கங்களுடன் நெருங்கிய தொடர்புடையவன் இமாம் அலி. வெடிகுண்டு செய்வதில் நல்ல தேர்ச்சிபெற்றவன். காஷ்மீரிலும் நேபாளத்திலும் வெடிகுண்டு தயாரிப்பில் சிறப்புப் பயிற்சி பெற்றவன்.

இவன் மதுரையில் கோர்ட்டுக்குக் கொண்டு செல்லப்பட்டபோது தனது கூட்டாளிகளால் போலீஸ் பிடியில் இருந்துமீட்கப்பட்டு கொண்டு செல்லப்பட்டான். இவனுடன் சேர்ந்து தப்பிய ஹைதர் அலி போலீசிடம் மீண்டும்சிக்கிவிட்டான்.

ஆனால், இமாம் அலி இன்னும் தலைமறைவாகவே இருக்கிறான்.

இந் நிலையில் ஜெயங்கொண்டம் அருகே முந்திரிக் காட்டுப் பகுதியில் சந்தேகத்திற்கிடமாக மறைந்திருந்த 2 பேரைபூச்சி மருந்து அடிக்கச் சென்ற விவசாயிகள் பார்த்துள்ளனர். அவர்களை விவசாயிகள் நெருங்கியபோது இருவரும்ஓடினர்.

விவசாயிகள் விரட்டிச் சென்று ஒருவரைப் பிடித்தனர். அவர் ஆண்டிமடம் போலீசாரிம் ஒப்படைக்கப்பட்டார்.அவரிடம் நடத்தப்பட்ட விசாரணையில் அவரது பெயர் ஷேக் தாவூத் என்று தெரியவந்தது. ஆனால், மனநலம்பாதிக்கப்பட்டவர் போல பேசினார். அவர் மென்டல் மாதிரி நடிக்கிறார் என்ற சந்தேகம் ஏற்பட்டுள்ளது. அவரைமன நல நிபுணர்களைக் கொண்டு பரிசோதனை செய்ய முடிவு செய்யப்பட்டுள்ளது.

இந் நிலையில் தப்பியோடிய இன்னொரு நபர் இமாம் அலியாக இருக்கலாம் என்ற சந்தேகமடைந்த ஆண்டிமடம்போலீசார் உடனடியாக சென்னைக்குத் தகவல் அனுப்பினர்.

இதையடுத்து திருச்சியில் இருந்து பெரும் போலீஸ் படை ஜெயங்கொண்டம் விரைந்தது. துப்பாக்கி ஏந்திய இந்தப்படையினர் முந்திரிக் காட்டுப் பகுதியை தீவிரமாக சோதனையிட்டு வருகின்றனர்.

இந்தப் பகுதியில் அனைத்து லாட்ஜ்கள், பஸ்கள், கார்கள், வேன்கள், லாரிகளும் சோதனையிடப்பட்டு வருகின்றன.

தமிழ் தீவிரவாதிகள் கைது:

இந் நிலையில் திருச்சி அருகே அரியலூரில் முந்திரிக் காட்டுப் பகுதியை சோதனையிட்ட போலீசார் அங்குவெடிமருந்துகள் மற்றும் டெட்டோனேட்டர்களுடன் மறைந்திருந்த தமிழ் விடுதலை இயக்கத்தைச் சேர்ந்த 4பேரைக் கைது செய்தனர்.

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+