இதுவன்றோ பரந்த மனப்பான்மை: ஜெ. குறித்து கருணாநிதி

Subscribe to Oneindia Tamil

சென்னை:

ஸ்டாலின் மேயராக இருப்பதா அல்லது எம்.எல்.ஏவாக இருப்பதா என்பது குறித்து சட்டமும், கட்சியும் முடிவுசெய்யும் என திமுக தலைவர் கருணாநிதி கூறினார்.

மேயராக இருப்பவர் எம்.எல்.ஏவாகவும் இருக்கத் தடை விதிக்கும் சட்டத்தைக் கொணடு வர முதல்வர் ஜெயலலிதாதிட்டமிட்டுள்ளார்.

ஸ்டாலினின் ஏதாவது ஒரு பதவியைப் பறிக்கக் கொண்டு வரப்பட்டுள்ள இந்தச் சட்டம் குறித்து நிருபர்களிடம்கருணாநிதி கூறுகையில்,

இதன் மூலம் ஜெயலலிதா தனது பரந்த மனப்பான்மையைக் காட்டிவிட்டார். முதலில் சட்டம் வரட்டும். அதன்பின்னர் ஸ்டாலின் எந்தப் பதவியில் நீடிப்பது என்பது குறித்து கட்சியும் சட்டமும் முடிவு செய்யும்.

நான் கைது செய்யப்பட்டதைக் கண்டித்த மனித உரிமைக் கமிஷன் மீதே தமிழக அரசு வழக்குப் போடுகிறது. இதன்மூலம் மனித உரிமைகளை இந்த அரசு எவ்வளவு மதிக்கிறது என்பது வெட்டவெளிச்சமாதிவிட்டது என்றார்.

ஸ்டாலின் விஷயத்தில் கட்சியும் சட்டமும் முடிவு செய்யும் என்று கூறியுள்ளதன் மூலம் ஜெயலலிதா அரசு கொண்டுவரும் சட்டத்துக்கு எதிராக திமுக நீதிமன்றத்தில் வழக்குத் தொடரும் என்பதை கருணாநிதி மறைமுகமாக சுட்டிக்காட்டியுள்ளார்.

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+