ஜெயலலிதாவைச் சந்தித்தார் குவைத் பெண் தலால் ஆஸ்மி

Subscribe to Oneindia Tamil

சென்னை:

தனது காதலன் காதர் பாட்சாவுடன் குவைத்தில் இருந்து போலி பாஸ்போர்ட் மூலம் தமிழகத்துக்கு தப்பி வந்த தலால்ஆஸ்மி இன்று காலை தலைமைச் செயலகத்தில் முதல்வர் ஜெயலலிதாவை சந்தித்துப் பேசினார்.

தான் இந்தியாவிலேயே தங்கியிருக்க உதவுமாறு அவர் ஜெயலலிதாவின் கேட்டுக் கொண்டார்.

காலை தலைமைச் செயலகத்துக்கு தனது காதலன் காதர் பாட்சாவுடன் வந்த தலால் ஆஸ்மிக்கு பரிசு கொடுத்துவரவேற்றார் ஜெயலலிதா.

பின்னர் குவைத் தூதரகம் மூலமாக முயற்சி செய்து எப்படியாவது உங்களை இந்தியாவில் தங்க வைக்க முயற்சிசெய்கிறேன் என்று தலால் ஆஸ்மியிடம் ஜெயலலிதா உறுதியளித்தார்.

இது தவிர அவர்களின் திருமணத்துக்கும் முழு ஏற்பாடுகள் செய்வதாகவும் ஜெயலலிதா உறுதியளித்தபோதுஅந்தப் பெண்ணும், காதர்பாட்சாவும் கண் கலங்கினர். இருவரும் ஜெயலலிதாவுக்கு நன்றி தெரிவித்தனர்.

உடனடியாக இந்தியக் குடியுரிமை வழங்கப்பட மாட்டாது என்று தெரியவந்துள்ளது.

அதே நேரத்தில் அவரை மத்திய அரசு துபாய்க்கு திரும்பவும் அனுப்பாது என்றும் கூறப்படுகிறது.

ஆந்திரவைச் சேர்ந்த தனது காதலருடன் போலி பாஸ்போர்ட் பயன்படுத்தி தமிழகத்துக்கு விமானம் மூலம் தப்பிவந்த தலால் ஆஸ்மி சென்னை விமான நிலையத்திலேயே கைது செய்யப்பட்டார்.

அவரை குவைத்துக்குத் திரும்ப அனுப்புமாறு அந் நாட்டு அரசு இந்தியாவிடம் கோரியுள்ளது. ஆனால், இதற்குதமிழக முதல்வர் ஜெயலலிதா, திமுக தலைவர் கருணாநிதி, மதிமுக தலைவர் வைகோ, பா.ம.க. தலைவர் ராமதாஸ்ஆகியோர் எதிர்ப்புத் தெரிவித்துள்ளனர்.

தலால் ஆஸ்மியை திரும்ப அனுப்பினால் அந் நாட்டுச் சட்டப்படி கல்லால் அடித்துக் கொல்லப்படுவார் என்பதால்அவருக்கு இந்தியக் குடியுரிமை வழங்குமாறு கோரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.

இதை உள்துறை அமைச்சர் அத்வானி கொள்கை அளவில் ஏற்றுக் கொண்டுள்ளார்.

இந் நிலையில் மத்திய உள்துறை இணையமைச்சர் ஐ.டி.சாமி நிருபர்களிடம் கூறுகையில்,

தலால் ஆஸ்மிக்கு உடனடியாக இந்தியக் குடியுரிமை வழங்க முடியாது. அதில் பல சட்டச் சிக்கல்கள் உள்ளன.அவர் போலி பாஸ்போர்ட்டில் இந்தியாவுக்குள் வந்தது சர்வதேச சட்டப்படி மாபெரும் குற்றமாகும். இதனால்,அதற்கான வழக்கை அவர் சந்தித்துத் தான் ஆக வேண்டும்.

அதே நேரத்தில் அவரிடம் மனிதாபிமானத்துடன் நடந்து கொள்ளவும் மத்திய அரசு முடிவு செய்துள்ளது. அவரைக்கைது செய்வது போன்ற நடவடிக்கைகள் எடுக்க வேண்டாம் என இந்திய புலனாய்வுப் பிரிவுகளுக்கு உத்தரவுபிறப்பிக்கப்பட்டுவிட்டது.

போலி பாஸ்போர்ட் வழக்கு விசாரணை முடிந்து தீர்ப்பு வரும் வரை அவரை துபாய்க்கும் அனுப்ப மாட்டோம்என்றார்.

விமான நிலையப் போலீசாரால் கைது செய்யப்பட்டு சிறையில் இருந்த அவரை விடுவிக்க முதல்வர் ஜெயலலிதாஉத்தரவிட்டதைத் தொடர்ந்து அவர் விடுதலையாகிவிட்டார்.

முன்னதாக் அவர் கைது செய்யப்பட்டு மத்திய சிறையில் அடைக்கப்பட்டிருந்தபோது உணவு சாப்பிடாமல் அழுதுகொண்டே இருந்திருக்கிறார்.

அப்போது அவருக்கு செக்ஸ் டாக்டர் பிரகாசுக்கு பலான வீடியோ எடுக்க உதவி புரிந்ததால் கைது செய்யப்பட்டுசிறையில் அடைக்கப்பட்டுள்ள நர்ஸ் சித்ரா தான் ஆறுதல் கூறி அமைதிப்படுத்தினார் என்ற விவரம் இப்போதுவெளியாகியுள்ளது.

இப்போது சென்னையில் தங்கியுள்ள காதர்பாட்சா- தலால் ஆஸ்மி இருவரும் ஆந்திர முதலவ்ர சந்திரபாபுநாயுடுவையும் சந்தித்து பாதுகாப்புக் கேட்கவும் திட்டமிட்டுள்ளனர். காதர் பாட்சா ஆந்திரவைச் சேர்ந்தவர்.

காதர் பாட்சாவுடன் நெருங்கிப் பழகியதில் தலால் ஆஸ்மி கர்ப்பமடைந்துவிட்டார் என்பது குறிப்பிடத்தக்கது.

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+