தொடரும் தீண்டாமை: குமுறும் கூத்தாரம்பாக்கம் தலித்துகள்
சென்னை:
காஞ்சிபுரம் அருகே உயர் ஜாதியைச் சேர்ந்தவர்கள் தங்களைக் கொடுமைப்படுத்துவதாக தாழ்த்தப்பட்ட வகுப்பைச்சேர்ந்தவர்கள் புகார் கூறி வருகின்றனர்.
காஞ்சிபுரம் மாவட்டத்தைச் சேர்ந்தது கூத்தாரம்பாக்கம் கிராமம். இந்தக் கிராமத்தைச் சேர்ந்த தாழ்த்தப்பட்டவகுப்பைச் சேர்ந்த நூற்றுக்கணக்கான கிராமத்தினர் சென்னையில் நேற்று (புதன்கிழமை) கூட்டம் ஒன்றை நடத்தினர்.இதில் பல்வேறு தலித் நல அமைப்புகள் கலந்து கொண்டன.
இந்தக் கூட்டத்தில் தங்களை உயர் ஜாதியைச் சேர்ந்தவர்கள் பல ஆண்டுகளாகக் கொடுமைப்படுத்தி வருவதாகதலித் வகுப்பைச் சேர்ந்தவர்கள் புகார் கூறினர்.
கோவிலுக்குள் நுழைய அனுமதி மறுப்பது, கோவில் திருவிழாவுக்கு உரிய பணம் செலுத்தியும் கூட தங்களதுதெருவுக்குள் சாமி சிலைகள் அடங்கிய தேரைக் கொண்டு வர மறுப்பது, கிணறுகளில் தண்ணீர் எடுக்க அனுமதிமறுப்பது என காலம் காலமாக இருந்து வரும் தீண்டாமைக் கொடுமை தங்களது கிராமத்தில் இன்னும் நடந்துவருவதாக அவர்கள் கூறினர்.
உயர் ஜாதியினருக்கு போலீஸ் துணை இருப்பதாகவும், அவர்களுடன் சேர்ந்து கொண்டு தங்களை இருதரப்பினரும் கொடுமைப்படுத்தி வருவதாகவும், இந்த நிலை நீடித்தால் அரசு மீது தங்களுக்கு இருந்த நம்பிக்கைபோய் விடும் என்றும் அவர்கள் கூறினர்.












Click it and Unblock the Notifications