கன்னியாகுமரியில் மின்னல் தாக்கி இருவர் பலி
Subscribe to Oneindia Tamil
கன்னியாகுமரி:
கன்னியாகுமரி அருகே நேற்று (ஞாயிற்றுக்கிழமை) மாலை மின்னல் தாக்கியதில் 2 பேர் உடல் கருகி உயிரிழந்தனர்.
கன்னியாகுமரியில் கடந்த ஒரு வார காலமாக மேகமூட்டத்துடன் அவ்வப்போது இடி, மின்னலுடன் மழை பெய்துவருகிறது.
இந்நிலையில் நேற்று மாலை கன்னியாகுமரி அருகே மின்னல் தாக்கியதில் டேவிட் ராஜன் மற்றும் சுனில் குமார்ஆகிய இளைஞர்கள் உடல் கருகி சம்பவ இடத்திலேயே உயிரிழந்தனர்.
மற்றொருவர் படுகாயத்துடன் மருத்துவமனையில் சேர்க்கப்பட்டுள்ளார்.












Click it and Unblock the Notifications