தர்மபுரி அருகே 2 பெண் சிசுக்கள் கொலை
தர்மபுரி:
தர்மபுரி அருகே சமீபத்தில்ல் 2 பெண் சிசுக் கொலைகள் நடந்துள்ளன.
தர்மபுரி மாவட்டம் பெண்ணாகரம் அருகே உள்ள போடூர் போயர் காலனியைச் சேர்ந்தவர் பழனிச்சாமி.இவருடைய மனைவி சீரம்மாள்.
இவர்களுக்கு ஏற்கனவே மூன்று பெண் மற்றும் இரண்டு ஆண் குழந்தைகள் உள்ளனர். இந்நிலையில் சமீபத்தில்அவர்களுக்கு மற்றொரு பெண் குழந்தை பிறந்தது.
பிறந்த சில மணி நேரத்திலேயே உடல்நிலை சரியில்லாமல் அந்தப் பெண் குழந்தை இறந்து விட்டதாகக் கூறி,தங்கள் வீட்டின் அருகிலேயே அக்குழந்தையைப் புதைத்துவிட்டனர்.
இந்நிலையில் இந்தப் பெண் குழந்தையின் சாவில் மர்மம் இருப்பதாகக் கூறி, அந்தக் கிராம நிர்வாக அலுவலரானமுனுசாமி, பெண்ணாகரம் போலீஸ் நிலையத்தில் புகார் கொடுத்தார்.
இதையடுத்து அந்தக் குழந்தையைப் போலீசார் தோண்டியெடுத்து விசாரணை செய்து வருகின்றனர்.
இதேபோல் பாரூர் அருகே பெண்டர அள்ளியைச் சேர்ந்த அர்ச்சுனன்-குந்தியம்மாள் தம்பதிக்கு சமீபத்தில் ஒருபெண் குழந்தை பிறந்தது. உடல்நிலை சரியில்லாமல் பிறந்த சில நாட்களிலேயே அந்தக் குழந்தைஇறந்துவிட்டதாகக் கூறி, அதைப் பெற்றோர் புதைத்து விட்டனர்.
இந்தக் குழந்தையின் சாவில் சந்தேகம் இருப்பதாக பெண்டர அள்ளி கிராம நிர்வாக அலுவலரான மனோகரன்,போலீசாரிடம் புகார் செய்தார். இதையடுத்து இந்தக் குழந்தையின் பிணத்தையும் பாரூர் போலீசார் தோண்டி எடுத்து,விசாரித்து வருகின்றனர்.
அமிலம் வீசி பெண் குழந்தை கொலை:
இதற்கிடையே கிருஷ்ணகிரி அருகே மாடர அள்ளி காலனியைச் சேர்ந்த பிரகாஷ்-கீதா தம்பதியின் 5 நாள் பெண்குழந்தையை, கீதாவின் தாயான லட்சுமி அமிலம் வீசி கொலை செய்தார்.
பிரகாஷ்-கீதாவின் காதல் திருமணத்துக்கு லட்சுமி தொடர்ந்து எதிர்ப்பு தெரிவித்து வந்ததையடுத்து, அவர் இந்தக்கொலையைச் செய்தார் என்று கூறப்படுகிறது.
லட்சுமியை மத்தூர் போலீசார் கைது செய்து விசாரித்து வருகிறன்றனர்.












Click it and Unblock the Notifications