சென்னையில் சிவாஜிக்கு சிலை கோருகிறது ரசிகர் மன்றம்
சென்னை:
சென்னை அண்ணா சாலையில் நடிகர் திலகம் சிவாஜி கணேசனுக்கு சிலை வைக்க அனுமதி வழங்க வேண்டும்என்று கோரி முதல்வர் ஜெயலலிதாவுக்கு சிவாஜி கணேசன் ரசிகர் மன்றம் கடிதம் எழுதியுள்ளது.
அகில இந்திய சிவாஜி கணேசன் ரசிகர் மன்றத் தலைவர் பூமிநாதன் இந்தக் கோரிக்கையை விடுத்துள்ளார். அவர்ஜெயலலிதாவுக்கு எழுதியுள்ள கடிதத்தில்,
கலையுலகின் இரு கண்களாக விளங்கியவர்கள் மக்கள் திலகம் எம்.ஜி.ஆரும், நடிகர் திலகம் சிவாஜி கணேசனும்.இதில் மக்கள் திலகத்திற்கு அண்ணா சாலையில் வெண்கலத்தில் சிலை வைத்து பெருமை சேர்த்துள்ளீர்கள்.
நடிகர் திலகம், செவாலியே விருது பெற்றபோது சிறப்பான விழாவை நடத்தி சிவாஜிக்கு பெருமை சேர்த்துள்ளீர்கள்.அதுபோல, சிவாஜி கணேசனுக்கு அண்ணா சாலையின் முக்கிய இடத்தில் சிலை வைத்து பெருமை சேர்க்கவேண்டும்.
நடப்பு சட்டசபைத் தொடரிலேயே இதற்கான அறிவிப்பை தாங்கள் வெளியிட்டு லட்சோப லட்சம் சிவாஜிரசிகர்களின் வேண்டுகோளை நிறைவேற்றுவீர்கள் என்று ஆவலுடன் எதிர்பார்க்கிறோம் என்று கூறியுள்ளார்பூமிநாதன்.












Click it and Unblock the Notifications