பெண்களை காவல் நிலையங்களில் வைத்து விசாரிக்க ஐகோர்ட் தடைஸ்
சென்னை:
பெண்கள் மீதான புகார்கள் குறித்து சம்பந்தப்பட்ட பெண்களின் வீடுகளுக்கே பெண் போலீஸார் மட்டும் சென்றுவிசாரணை நடத்த வேண்டும். பெண்களை காவல் நிலையத்திற்கு அழைத்து விசாரணை நடத்தக் கூடாது என்றுசென்னை உயர்நீதிமன்றம் அதிரடி உத்தரவு பிறப்பித்துள்ளது.
சென்னையைச் சேர்ந்தவர் நித்யா. இவரது சகோதரி ஜாய்ஸ் இமாகுலேட். நித்யா, ரிஸ்வான் என்பவரிடம் தனதுரெடிமேட் நிறுவனத்துக்காக பணம் கடன் வாஙகியிருந்தார். இந்த நிலையில் ரிஸ்வான் கொலை செய்யப்பட்டுவிட்டார். இதுதொடர்பாக நித்யாவின் வீட்டுக்கு போலீஸார் வந்துள்ளனர். அப்போது நித்யா வீட்டில் இல்லை.விசாரணைக்கு வந்த போலீஸார், ஜாய்ஸை, காவல் நிலையத்துக்கு அழைத்துச் சென்று நான்கு நாட்களுக்கு வைத்துவிசாரணை நடத்தியுளளனர். மேலும் அவருக்கு சரியாக சாப்பாடு போடாமலும், ஜாய்ஸின தந்தை முன்பேஅவரிடம் முறைகேடாக நடந்து காண்டதாகவும் தெரிகிறது.
பெண்களை மாலைக்கு மேல் காவல் நிலையத்தில் வைத்திருக்கக் கூடாது எனற சட்டவிதியை மீறிய போலீஸார்குறித்து பெண் சப் இன்ஸ்பெக்டர் மெர்ஸியிடம் புகார் கொடுத்துள்ளார் ஜாய்ஸ். ஆனால் ஜாய்ஸை கடுமையாகதிட்டி அனுப்பி விட்டார் மெர்ஸி.
இதையடுத்து கோர்ட்டில் சரண் அடைந்தார் ஜாய்ஸ். அவரை போலீஸ் காவலில் வைத்து விசாரிக்க அனுமதிக்குமாறுபோலீஸ் சார்பில் கோரிக்கை விடுக்கப்பட்டது. கோர்ட்டும் அனுமதித்தது. அதன் பின்னர் ஜாய்ஸ் ஒப்புதல்வாக்குமூலம் கொடுத்ததாகவும், அதன பேரில் சில ஆவணங்களை பறிமுதல் செய்துள்ளதாகவும் போலீஸ் சார்பில்தெரிவிக்கப்பட்டது.
ஆனால் இதை எதிர்த்து சென்னை உயர்நீதிமன்றத்தில் மனு செய்தார் ஜாய்ஸ். அதில் தான ஒப்புதல் வாக்குமூலம்எதுவும் கொடுக்கவில்லை என்றும், விசாரணையை வேறு அதிகாரிக்கு மாற்றுமாறும் கோரிக்கை விடுத்தார். இந்தமனுவை நீதிபதி கற்பக விநாயகம் விசாரித்தார். விசாரணைக்குப் பிறகு நீதிபதி கறபக விநாயகம் அதிரடி தீர்ப்பைவழங்கினார்.
அதில், பெண் சப் இன்ஸ்பெக்டர் மெர்சியின் பெயரில் உள்ள கருணை அவரது இதயத்தில் இல்லாமல் போனதுவருத்தம் தருகிறது. போலீஸ் நிலையங்களில் பெண் போலீஸார் நியமிக்கப்பட்டதன் நோக்கத்தையே மறந்து இவர்நடந்து கொண்டுள்ளார். தன்னிடம் புகார் கொடுக்க வந்த பெண்ணிடம் இரக்கம் காட்டாமல் கடுமையாக எச்சரித்துஅனுப்பியுள்ளார்.
மெர்சி மீதும், தவறாக நடந்து கொண்ட மறற போலீஸார் மீதும் நடவடிக்கை எடுக்க உத்தரவிடுகிறேன். மேலும்,கமிஷனர் விஜயக்குமார் மீது கோர்ட்டுக்கு நம்பிக்கை உள்ளது. எனவே அவரது நேரடி மேறபார்வையின் கீழ் உதவிஆணையாளர் தலைமையில் குழு அமைத்து இந்த வழக்கை விசாரிக்க உத்தரவிடுகிறேன்.
ஜாய்ஸ் இமாகுலேட்டுக்கு தமிழக அரசு நஷட ஈடாக ரூ. 1 லட்சத்தை ஒரு மாதத்திறகுள் வழங்க உத்தரவிடுகிறேன்என்று தனது தீர்ப்பில் கூறியுள்ளார் நீதிபதி கற்பக விநாயகம்.
-
கப்பு முக்கியம் பிகிலு.. விடாபிடியாய் நிற்கும் விஜய்.. ஓசூர்-க்கு ஜாக்பாட்! -
இந்தா ஆரம்பிச்சுட்டாங்கல்ல.. திருச்சி இடை தேர்தலில் திமுகவில் சீட் யாருக்கு! ரேசில் அன்பில் - இனிகோ! -
Indoor Plants: வீட்டின் காற்றைச் சுத்திகரித்து ஆக்ஸிஜன் அளவை அதிகரிக்கும் இன்டோர் செடிகள்! -
தேசிய அளவில் பலவீனமடையும் பாஜக எதிர்ப்பு.. காங்கிரஸ் செயலால் திட்டத்தை மாற்றும் திமுக! -
திருச்சி கிழக்கு இடைத்தேர்தல்.. தவெக வேட்பாளராக சிரஞ்சீவி? மேடையில் முதல்வர் விஜய் தந்த செம ஹிண்ட் -
"விஜய்" பெயரை யாரும் சொல்லக் கூடாது.. வார்த்தையைவிட்ட துணை சபாநாயகர்.. பத்திரிகையாளர் சொன்ன பதில்! -
திமுகவை தோற்கடித்த 8 அதிர்ச்சி காரணங்கள்.. ஸ்டாலின் மேஜைக்கு போன இறுதி ரிப்போர்ட்.. உள்ளே ஷாக்! -
தவெகவின் முதல் ராஜ்யசபா எம்.பி யார்? 4 பேரில் ஒருவர் பெயரை 'டிக்' அடிக்க ரெடியாகும் விஜய்! -
ஒரு 'நாளுக்கு' ரூ.22.63 லட்சம் சம்பளம் வாங்கும் இன்போசிஸ் ஊழியர்.. யாருப்பா அது! -
நன்றி மறக்காத விஜய்.. தவெகவின் முதல் ராஜ்யசபா எம்பி யார்? ரேசில் முன்னணியில் ’லெஃப்ட் - ரைட்’ ஹேண்ட் -
“தவெகவுக்கு ஓட்டு போடாத தென்காசி மக்களும் பாதிக்கப்படுகிறோம்”.. நள்ளிரவில் எழுந்த திடீர் போராட்டம்! -
“விஜய் இன்னொரு கருணாநிதி என நிரூபித்து வருகிறார்”.. அட்டாக் மோடில் வானதி சீனிவாசன்












Click it and Unblock the Notifications