சோனியா- முரசொலி மாறன் ரகசிய சந்திப்பு
சென்னை:
திமுக முக்கியத் தலைவர்களில் ஒருவரான முரசொலி மாறன் காங்கிரஸ் தலைவர் சோனியா காந்தியை ரகசியமாகசந்தித்துப் பேச்சு நடத்தினார். இதன்மூலம் பா.ஜ.க. கூட்டணியைக் கை கழுவிவிட்டு காங்கிரசுடன் கூட்டணிஅமைக்க திமுக திட்டமிட்டுள்ளதாகத் தெரிகிறது.
திமுகவை பா.ஜ.க. தொடர்ந்து பல விவகாரங்களிலும் புறக்கணித்து வருகிறது. குறிப்பாக மீண்டும் ஆட்சியைப்பிடித்த அதிமுக திடீரென பா.ஜ.க. ஆதரவு நிலையை எடுக்கத் துவங்கியதும் திமுகவுக்கு தேசிய ஜனநாயகக்கூட்டணியில் மரியாதை குறையத் தொடங்கிவிட்டது.
மாநில பா.ஜ.கவுடன் திமுகவுக்கு எந்த உறவும் இல்லை என்று கருணாநிதி அறிவித்துவிட்டார். இதைத் தொடர்ந்துநாங்கள் சுதந்திரமாகிவிட்டோம் என மாநில பா.ஜ.க. தலைவர்கள் பேசி வருகின்றனர். ஜெயலலிதா ஆதரவுராகத்தையும் பாடத் தொடங்கிவிட்டனர்.
இதனால் எரிச்சலில் உள்ள கருணாநிதி பா.ஜ.கவுடனான கூட்டணிக்கு முற்றுப் புள்ளி வைத்துவிட்டு காங்கிரசுடன்கூட்டணி சேர முடிவெடுத்துள்ளதாகத் தெரிகிறது.
மத்திய அமைச்சரான முரசொலி மாறன் டெல்லியில் தொடர்ந்து காங்கிரஸ் முக்கியத் தலைவர்களுடன் ரகசியமாகதொடர்பு கொண்டு வருவதாகக் கூறப்படுகிறது.
ராஜிவ் கொலைக்குப் பிறகு திமுகவை ஒதுக்கி வைத்திருந்த காங்கிரசின் நிலையிலும் மாற்றம் தெரியஆரம்பித்துள்ளது. புலிகள் விஷயத்தில் திமுக பட்டும்படாமல் இருந்து வருவது கூட காங்கிரஸ் ஆதரவுக்காகத் தான்என்று கூறப்படுகிறது.
இந் நிலையில் பா.ஜ.க. கூட்டணியில் அதிருப்தியில் உள்ள திமுகவுடனான உறவுக்கு காங்கிரசும் தயார் என்றேதெரிகிறது. சமீபத்தில் சோனியா காந்தியையும் முரசொலி மாறன் சந்தித்துப் பேசியுள்ளார்.
இத் தகவலை சட்டசபையில் முதல்வர் ஜெயலலிதாவும் உறுதிப்படுத்தினார்.
நேற்று திமுக உறுப்பினர் துரைமுருகனுக்கும் காங்கிரஸ் உறுப்பினர் போளூர் வரதனுக்கும் இடையே வாக்குவாதம்நடந்தது. அப்போது காங்கிரஸை போணியாகாத கட்சி என துரைமுருகன் வர்ணித்தார்.
அப்போது இடைமறித்துப் பேசிய ஜெயலலிதா கூறுகையில்,
டெல்லியில் என்ன நடந்து கொண்டிருக்கிறது என்பது தெரியாமல் இந்த இருவரும் பேசிக் கொண்டுள்ளனர்.சமீபத்தில் மாறன் டெல்லியில் சோனியாவை சந்தித்துப் பேசினார் என்றார்.
இதற்குப் பதிலளித்த துரைமுருகன், பேசியிருக்கலாம். அது ஒரு மரியாதை நிமித்தமான சந்திப்புத் தான் என்றார்.
ஜெயலலிதா (இடைமறித்து): இது வெளிப்படையாக நடந்த சந்திப்பு அல்ல. மிக ரகசியமாக நடந்த சந்திப்புஎன்றார்.
துரைமுருகன்: எனக்கும் ஒரு ரகசிய தகவல் வந்தது. நீங்கள் பா.ஜ.க. தலைவர்களுக்கு தூது அனுப்பிக்கொண்டிருக்கிறீர்கள் என்பது தான் அந்தத் தகவல்
ஜெயலலிதா: துரைமுருகன் சொல்வது கற்பனைச் செய்தி. நான் சொன்னது உண்மையான செய்தி. என்னிடம்உளவுத்துறை உள்ளது என்பதை நினைவூட்ட விரும்புகிறேன் என்றார்.
இந்த இருவரின் வாதங்களில் இருந்து திமுக காங்கிரசை நோக்கியும், அதிமுக பா.ஜ.கவை நோக்கியும் போய்க்கொண்டிருப்பது தெளிவாகிறது.
-
கப்பு முக்கியம் பிகிலு.. விடாபிடியாய் நிற்கும் விஜய்.. ஓசூர்-க்கு ஜாக்பாட்! -
இந்தா ஆரம்பிச்சுட்டாங்கல்ல.. திருச்சி இடை தேர்தலில் திமுகவில் சீட் யாருக்கு! ரேசில் அன்பில் - இனிகோ! -
Indoor Plants: வீட்டின் காற்றைச் சுத்திகரித்து ஆக்ஸிஜன் அளவை அதிகரிக்கும் இன்டோர் செடிகள்! -
தேசிய அளவில் பலவீனமடையும் பாஜக எதிர்ப்பு.. காங்கிரஸ் செயலால் திட்டத்தை மாற்றும் திமுக! -
திருச்சி கிழக்கு இடைத்தேர்தல்.. தவெக வேட்பாளராக சிரஞ்சீவி? மேடையில் முதல்வர் விஜய் தந்த செம ஹிண்ட் -
"விஜய்" பெயரை யாரும் சொல்லக் கூடாது.. வார்த்தையைவிட்ட துணை சபாநாயகர்.. பத்திரிகையாளர் சொன்ன பதில்! -
திமுகவை தோற்கடித்த 8 அதிர்ச்சி காரணங்கள்.. ஸ்டாலின் மேஜைக்கு போன இறுதி ரிப்போர்ட்.. உள்ளே ஷாக்! -
தவெகவின் முதல் ராஜ்யசபா எம்.பி யார்? 4 பேரில் ஒருவர் பெயரை 'டிக்' அடிக்க ரெடியாகும் விஜய்! -
ஒரு 'நாளுக்கு' ரூ.22.63 லட்சம் சம்பளம் வாங்கும் இன்போசிஸ் ஊழியர்.. யாருப்பா அது! -
நன்றி மறக்காத விஜய்.. தவெகவின் முதல் ராஜ்யசபா எம்பி யார்? ரேசில் முன்னணியில் ’லெஃப்ட் - ரைட்’ ஹேண்ட் -
“தவெகவுக்கு ஓட்டு போடாத தென்காசி மக்களும் பாதிக்கப்படுகிறோம்”.. நள்ளிரவில் எழுந்த திடீர் போராட்டம்! -
“விஜய் இன்னொரு கருணாநிதி என நிரூபித்து வருகிறார்”.. அட்டாக் மோடில் வானதி சீனிவாசன்












Click it and Unblock the Notifications