மோடியை நீக்கக் கோரி தெலுங்கு தேசம் போர்க் கொடி

Subscribe to Oneindia Tamil

ஹைதராபாத்:

குஜராத் வன்முறையைக் கண்டித்து அம்மாநில முதல்வர் நரேந்திர மோடியை நீக்க வேண்டும் என்று கோரி பிரதமர்வாஜ்பாயை தெலுங்கு தேசக் கட்சியின் தலைவரான சந்திரபாபு நாயுடு நெருக்க ஆரம்பித்துள்ளார்.

இது தொடர்பாக ஹைதராபாத்தில் நேற்று (வியாழக்கிழமை) இரவு நடந்த தெலுங்கு தேச கட்சியின் அரசியல்விவகாரக் குழுக் கூட்டத்தில் தீர்மானம் ஒன்றம் நிறைவேற்றப்பட்டுள்ளது.

உடனடியாக குஜராத் முதல்வர் பதவியிலிருந்து மோடியை நீக்க வேண்டும் என்று பாஜகவை வற்புறுத்தப்போவதாக அந்தத் தீர்மானம் கூறுகிறது. மோடிக்குப் பதிலாக வேறொருவரை அப்பதவியில் வைக்கவும் அந்தத்தீர்மானம் கோரியுள்ளது.

குஜராத் முதல்வர் பொறுப்பிலிருந்து மோடியை நீக்கும் பேச்சுக்கே இடமில்லை என்று நேற்றுதான் பாஜக தலைவர்ஜனா. கிருஷ்ணமூர்த்தி கூறியிருந்தார்.

ஆனால் மத்தியில் ஆளும் தேசிய ஜனநாயகக் கூட்டணியில் ஒரு கட்சியான தெலுங்கு தேசம், 30 மக்களவைஎம்.பிக்களைக் கொண்டுள்ளது.

இதனால் தெலுங்கு தேசக் கட்சியின் வற்புறுத்தலுக்கு அடிபணிந்து போக வேண்டிய கட்டாய நிலையில் பாஜகஉள்ளது.

More From
Prev
Next
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+