மோடி விவகாரத்தால் அமளி: மக்களவை ஒத்திவைப்பு
டெல்லி:
குஜராத் முதல்வர் நரேந்திர மோடியை நீக்க வேண்டும் என்று கோரி காங்கிரஸ் உள்ளிட்ட எதிர்க் கட்சிகள் பெரும்அமளியில் ஈடுபட்டதையடுத்து, மக்களவை இன்று (திங்கள்கிழமை) முழுவதும் ஒத்திவைக்கப்பட்டது.
நாடாளுமன்றத்தின் பட்ஜெட் கூட்டத் தொடர் 2வது முறையாக இன்று காலை 11 மணிக்கு மீண்டும் தொடங்கியது.
தொடங்கிய சிறிது நேரத்திலேயே மோடியை நீக்க வேண்டும் என்று காங்கிரஸ் எம்.பிக்கள் உள்பட பல எதிர்க்கட்சியைச் சேர்ந்த எம்.பிக்கள் கோஷம் எழுப்பினர்.
அப்போது தெலுங்கு தேச எம்.பியான எர்ரன் நாயுடு, குஜராத் பிரச்சனை குறித்து பேச வாய்ப்பளிக்க வேண்டும்என்று கோரினார். உடனே சுமார் 56 எதிர்க் கட்சி எம்.பிக்களும் இதுகுறித்து ஒத்திவைப்புத் தீர்மானம்கொண்டுவரப்பட வேண்டும் என்று கோரினர்.
இதையடுத்து ஆளும் கட்சியான பாஜக எம்.பிக்கள் பதிலுக்குக் கோஷம் எழுப்பவே எதிர்க் கட்சி எம்.பிக்கள்கோபமடைந்தனர். அவர்கள் சபையின் மையப் பகுதிக்குச் சென்று கூச்சலிட ஆரம்பித்தனர்.
ஆனால், கேள்வி நேரத்திற்குப் பிறகு இந்த விவகாரத்தை எடுத்துக் கொள்ளலாம் என்று துணை சபாநாயகரானபி.எம். சயீத் கூறினார்.
ஆனால் அதை ஏற்றுக் கொள்ளாத எதிர்க் கட்சி எம்.பிக்களும், தெலுங்கு தேசக் கட்சி எம்.பிக்களும் "மோடியைநீக்க வேண்டும்" என்று தொடர்ந்து கூச்சல் எழுப்பிக் கொண்டே இருந்தனர். இதைத் தொடர்ந்து அவையில் பெரும்கூச்சலும் குழப்பமும் நிலவியது.
இதையடுத்து மக்களவை துணை சபாநாயகர் பிற்பகல் 2 மணி வரை அவைக் கூட்டத்தை ஒத்திவைத்தார்.
அவை ஒத்திவைக்கப்பட்ட பிறகு சமதா கட்சித் தலைவர் முலாயம் சிங் யாதவ் மற்றும் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட்கட்சித் தலைவர் சோம்நாத் சட்டர்ஜி ஆகியோர் அமர்ந்திருந்த இருக்கைக்குச் சென்று ஏதோ ஆலோசித்ததாகத்தெரிகிறது.
இதன் பிறகு பிற்பகல் 2 மணிக்கு மீண்டும் மக்களவை கூடியபோதும், எதிர்க் கட்சி எம்.பிக்கள் வந்ததும்வராததுமாகக் கூச்சல் போட ஆரம்பித்தனர்.
மோடியை நீக்குவது தொடர்பாக ஒத்திவைப்புத் தீர்மானம் கொண்டுவர வேண்டும் என்று தெலுங்கு தேசஎம்.பிக்களும் தொடர்ந்து கூச்சலிட்டுக் கொண்டே இருந்தனர்.
சயீதும் வழக்கம்போல அவர்களை அமைதியாக இருக்கும்படி கேட்டுக் கொண்டே இருந்தார். ஆனாலும் அமளிநின்ற பாடில்லை.
இதையடுத்து இன்று முழுவதும் அவை நடவடிக்கைகள் எதுவும் நடைபெறாமல் மக்களவை ஒத்திவைக்கப்பட்டது.
ராஜ்யசபாவிலும் அமளி
இதற்கிடையே மோடி விவகாரம் தொடர்பாக ராஜ்யசபாவிலும் பெரும் அமளி ஏற்பட்டதையடுத்து இன்றுமுழுவதும் அவை நடவடிக்கைகள் ஒத்திவைக்கப்பட்டன.
கேள்வி நேரத்தின்போது எதிர்க் கட்சி எம்.பிக்களுடன் சேர்ந்து கொண்ட தெலுங்கு தேசம் எம்.பிக்களும் மோடியைநீக்கியே தீர வேண்டும் என்று கூச்சலிட்டனர்.
இதையடுத்து அவை பத்து நிமிடங்களுக்கு ஒத்திவைக்கப்பட்டது. ஆனால் அவை மீண்டும் கூடியபோது, எதிர்க்கட்சி எம்.பிக்களின் கூச்சலும் கூடிக் கொண்டே போனது.
ராஜ்யசபா தலைவரும் துணை ஜனாதிபதியுமான கிருஷ்ணகாந்த் அவர்களை அமைதிப்படுத்த எவ்வளவோமுயன்றார். ஆனால் அவர்கள் தொடர்ந்து கூச்சலிட்டுக் கொண்டே இருந்ததால், அவை நடவடிக்கைகளைஇன்றைக்கு முழுவதும் ஒத்திவைத்தார் கிருஷ்ணகாந்த்.
-
திருச்சி கிழக்கு இடைத்தேர்தல்.. தவெக வேட்பாளராக சிரஞ்சீவி? மேடையில் முதல்வர் விஜய் தந்த செம ஹிண்ட் -
நன்றி மறக்காத விஜய்.. தவெகவின் முதல் ராஜ்யசபா எம்பி யார்? ரேசில் முன்னணியில் ’லெஃப்ட் - ரைட்’ ஹேண்ட் -
“தவெகவுக்கு ஓட்டு போடாத தென்காசி மக்களும் பாதிக்கப்படுகிறோம்”.. நள்ளிரவில் எழுந்த திடீர் போராட்டம்! -
"பச்சை துரோகம்.. வாக்கு அறுவடை முடிந்ததும் ரிசர்வ் வங்கியை காரணம் காட்டுவதா?" தங்கம் தென்னரசு தாக்கு -
திமுகவிற்கு விஜய் சொன்ன 'நோ'.. ஸ்விட்ச் ஆப் ஆன போன்.. மேஜைக்கு வந்த உளவுத்துறை ரிப்போர்ட்! -
SP Velumani: வேலுமணிக்கு வில்லனாக மாறிய முனுசாமி.. பதவிக்கு விழுந்த வேட்டு! -
கொ*யில் முடிந்த பார் டான்ஸ்.. கொதித்துப் போன கோயம்பேடு! யான்சிக்கு இப்படியா சாவு வரனும்! ஷாக்! -
Annamalai New Party LIVE:தனிக் கட்சி தொடங்குகிறார் அண்ணாமலை? பிறந்தநாளன்று வெளியாகும் அப்டேட்? -
விஜய்க்கு பெரிய தலைவலி.. ஒரே நாளில் வீட்டுக்கு போன 5000 ஊழியர்கள் ஓய்வு! ஆட்டம் காணும் அரசு துறைகள் -
நான் பார்த்துகிறேன் நண்பா.. உறுதியாக சொன்ன விஜய்.. அஜித் தாய் மறைந்த இரவு.. நடந்தது என்ன? -
பிளாக் அண்ட் ஒயிட் கோட் சூட் அணிவது இதற்காகத் தான்.. ரகசியத்தை போட்டு உடைத்த விஜய்! -
காலியான ராஜ்யசபா எம்பி பதவி! இன்று வேட்புமனு தாக்கல் தொடக்கம்! தவெகவின் முதல் எம்பி யார்?












Click it and Unblock the Notifications