நாடாளுமன்றத்தில் ஓட்டெடுப்பை தவிர்க்கும் பாஜக
டெல்லி:
குஜராத் முதல்வர் மோடியை நீக்கும் விவகாரத்தை நாடாளுமன்ற விதி 184ன் கீழ் விவாதித்து ஓட்டெடுப்புக்கு விடவேண்டும் என்ற எதிர்க் கட்சிகளின் கோரிக்கையை மத்திய அரசு நிராகரித்து விட்டது.
மோடி விவகாரம் தொடர்பாக நாடாளுமன்றத்தின் இரு அவைகளிலும் இன்று பெரும் அமளி ஏற்பட்டு, அவைநடவடிக்கைகள் நாள் முழுவதும் ஒத்திவைக்கப்பட்டன.
முன்னதாக இந்தப் பிரச்சனை தொடர்பாக ஒத்திவைப்புத் தீர்மானத்தைதான் முதலில் எதிர்க் கட்சிகளும் தேசியஜனநாயகக் கூட்டணியில் உள்ள முக்கியக் கட்சியான தெலுங்கு தேசக் கட்சியும் கோரி வந்தன.
இதையடுத்து ஒத்திவைக்கப்பட்ட மக்களவை மீண்டும் பிற்பகல் 2 மணிக்குக் கூடியபோது, நாடாளுமன்றத்தின்184வது விதிப்படி இந்த விஷயத்தை விவாதிக்க வேண்டும் என எதிர்க் கட்சிகள் கோரின.
இந்த விதியின்படி ஒரு பிரச்சனை தொடர்பாக நாடாளுமன்றத்தில் விவாதம் நடத்தப்படும். விவாதத்தின் முடிவில்அப்பிரச்சனை ஓட்டெடுப்புக்கு விடப்படும். இந்த ஓட்டெடுப்பில் தோற்றால் அது மத்திய அரசுக்கு மெஜாரிட்டிஇல்லை என்பதாகத் தான் அர்த்தமாகும்.
ஆனால் இந்தப் பிரிவின்படி விவாதத்தையோ ஓட்டெடுப்பையோ நடத்த அனுமதிக்கப் போவதில்லை என்று அரசுஅறிவித்து விட்டது.
ஹைதராபாத்தில் தெலுங்கு தேசம் கட்சித் தலைவரான சந்திரபாபு நாயுடுவிடம் , இந்த ஓட்டெடுப்பில் உங்கள் கட்சிஎப்படி வாக்களிக்கும் நிருபர்கள் கேட்டபோது, அதுபற்றி வாக்கெடுப்பு நடக்கும்போது தான் முடிவெடுப்போம்என்றார். இதன் மூலம் அரசுக்கு எதிராக வாக்களிக்கவும் தயார் என்பதை சுட்டிக் காட்டிவிட்டார்.
இந்த ஓட்டெடுப்பு என்பது கிட்டத்தட்ட நம்பிக்கையில்லா தீர்மானத்திற்கான வாக்கெடுப்பு போல்தான் என்பதுகுறிப்பிடத்தக்கது.
இந்த ஓட்டெடுப்பில் கலந்து கொள்வது குறித்து கடைசி நேரத்தில்தான் முடிவெடுப்போம் என்று நாயுடு கூறியதால்மத்தியில் ஆளும் பாஜகவைப் பயம் கவ்விக் கொண்டது.
அதனால்தான் இந்த ஓட்டெடுப்பை அனுமதிக்க முடியாது என்று கூறி அரசு தவிர்த்து வருகிறது. ஆட்சியைக்காப்பற்றிக் கொள்ளப் போதுமான எம்.பிக்கள் தங்கள் கைவசம் இல்லை என்பதையே பாஜக இச் செயல்உணர்த்துகிறது.
நாடாளுமன்றத்தில் எப்போது வேண்டுமானாலும் பெரும்பான்மை பலத்தை நிரூபிக்க தான் தயார் என்றுநேற்றுதான் பிரதமர் வாஜ்பாய் கூறியிருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.
-
திருச்சி கிழக்கு இடைத்தேர்தல்.. தவெக வேட்பாளராக சிரஞ்சீவி? மேடையில் முதல்வர் விஜய் தந்த செம ஹிண்ட் -
நன்றி மறக்காத விஜய்.. தவெகவின் முதல் ராஜ்யசபா எம்பி யார்? ரேசில் முன்னணியில் ’லெஃப்ட் - ரைட்’ ஹேண்ட் -
“தவெகவுக்கு ஓட்டு போடாத தென்காசி மக்களும் பாதிக்கப்படுகிறோம்”.. நள்ளிரவில் எழுந்த திடீர் போராட்டம்! -
"பச்சை துரோகம்.. வாக்கு அறுவடை முடிந்ததும் ரிசர்வ் வங்கியை காரணம் காட்டுவதா?" தங்கம் தென்னரசு தாக்கு -
திமுகவிற்கு விஜய் சொன்ன 'நோ'.. ஸ்விட்ச் ஆப் ஆன போன்.. மேஜைக்கு வந்த உளவுத்துறை ரிப்போர்ட்! -
SP Velumani: வேலுமணிக்கு வில்லனாக மாறிய முனுசாமி.. பதவிக்கு விழுந்த வேட்டு! -
கொ*யில் முடிந்த பார் டான்ஸ்.. கொதித்துப் போன கோயம்பேடு! யான்சிக்கு இப்படியா சாவு வரனும்! ஷாக்! -
Annamalai New Party LIVE:தனிக் கட்சி தொடங்குகிறார் அண்ணாமலை? பிறந்தநாளன்று வெளியாகும் அப்டேட்? -
விஜய்க்கு பெரிய தலைவலி.. ஒரே நாளில் வீட்டுக்கு போன 5000 ஊழியர்கள் ஓய்வு! ஆட்டம் காணும் அரசு துறைகள் -
நான் பார்த்துகிறேன் நண்பா.. உறுதியாக சொன்ன விஜய்.. அஜித் தாய் மறைந்த இரவு.. நடந்தது என்ன? -
பிளாக் அண்ட் ஒயிட் கோட் சூட் அணிவது இதற்காகத் தான்.. ரகசியத்தை போட்டு உடைத்த விஜய்! -
காலியான ராஜ்யசபா எம்பி பதவி! இன்று வேட்புமனு தாக்கல் தொடக்கம்! தவெகவின் முதல் எம்பி யார்?












Click it and Unblock the Notifications