ஜெயாவின் செயலால் இலங்கை அமைதி முயற்சி குலையலாம் - கருணாநிதி கவலை
சென்னை:
விடுதலைப்புலிகளின் தலைவரான வேலுப்பிள்ளை பிரபாகரனைப் பிடித்து இந்தியாவுக்குக் கொண்டுவர வேண்டும்என்று தமிழக சட்டசபையில் கொண்டு வரப்படும் தீர்மானத்தால் இலங்கை அமைதிப் பேச்சுவார்த்தை தடைபடலாம்என்று திமுக தலைவர் கருணாநிதி கவலை தெரிவித்துள்ளார்.
பிரபாகரனைப் பிடித்துக் கொண்டுவர வேண்டும் என்றும் புலிகள் மீதான தடையை நீடிப்பது குறித்தும் நாளை(செவ்வாய்க்கிழமை) தமிழக சட்டசபையில் தீர்மானம் கொண்டுவரப்படும் என்று சமீபத்தில் தமிழக முதல்வர்ஜெயலலிதா அறிவித்திருந்தார்.
இதுகுறித்து நேற்று சென்னையில் நிருபர்களிடம் கருணாநிதி கூறியதாவது:
இலங்கையில் பல ஆண்டுகளுக்குப் பிறகு இப்போதுதான் அமைதி ஏற்படும் சூழ்நிலை உருவாகியுள்ளது.
கடந்த 1995ம் ஆண்டிலேயே பிரபாகரனை இந்தியாவுக்குக் கொண்டுவரும் முயற்சியில் மத்திய அரசு ஈடுபட்டு,இலங்கை அரசுடன் பேச்சு நடத்தியது. தற்போது இன்டர்போல் இந்த வழக்கை விசாரித்து வருகிறது.
முன்பு பிரேமதாசா மற்றும் சந்திரிகா ஆகியோர் ஆட்சியில் இருந்தபோதே பிரபாகரனைப் பிடித்துக் கொண்டுவரமுடியவில்லை. இப்போது அவருடன் மிகவும் நேசமாக இருக்கும் பிரதமர் ரணில் விக்கிரமசிங்கே, அமைதிக்கானமுயற்சியிலும் ஈடுபட்டுள்ளார்.
இந்நிலையில் தமிழக அரசு கொண்டுவரவுள்ள இந்தத் தீர்மானத்தினால் அமைதி முயற்சிகள் பாதிக்கப்படுமோஎன்று சந்தேகம் எழுந்துள்ளது.
சமாதான சூழ்நிலைக்கு இந்தத் தீர்மானம் சாதகமாக இருக்குமா அல்லது பாதகமாக இருக்குமா என்பதைசெவ்வாய்க்கிழமை சொல்வோம் என்றார் கருணாநிதி.
செவ்வாய்க்கிழமை சட்டசபைக்குச் செல்வீர்களா என்று நிருபர்கள் கேட்டதற்கு, அதை இப்போது சொல்ல முடியாதுஎன்றார் கருணாநிதி.
-
திருச்சி கிழக்கு இடைத்தேர்தல்.. தவெக வேட்பாளராக சிரஞ்சீவி? மேடையில் முதல்வர் விஜய் தந்த செம ஹிண்ட் -
நன்றி மறக்காத விஜய்.. தவெகவின் முதல் ராஜ்யசபா எம்பி யார்? ரேசில் முன்னணியில் ’லெஃப்ட் - ரைட்’ ஹேண்ட் -
“தவெகவுக்கு ஓட்டு போடாத தென்காசி மக்களும் பாதிக்கப்படுகிறோம்”.. நள்ளிரவில் எழுந்த திடீர் போராட்டம்! -
"பச்சை துரோகம்.. வாக்கு அறுவடை முடிந்ததும் ரிசர்வ் வங்கியை காரணம் காட்டுவதா?" தங்கம் தென்னரசு தாக்கு -
திமுகவிற்கு விஜய் சொன்ன 'நோ'.. ஸ்விட்ச் ஆப் ஆன போன்.. மேஜைக்கு வந்த உளவுத்துறை ரிப்போர்ட்! -
SP Velumani: வேலுமணிக்கு வில்லனாக மாறிய முனுசாமி.. பதவிக்கு விழுந்த வேட்டு! -
கொ*யில் முடிந்த பார் டான்ஸ்.. கொதித்துப் போன கோயம்பேடு! யான்சிக்கு இப்படியா சாவு வரனும்! ஷாக்! -
Annamalai New Party LIVE:தனிக் கட்சி தொடங்குகிறார் அண்ணாமலை? பிறந்தநாளன்று வெளியாகும் அப்டேட்? -
விஜய்க்கு பெரிய தலைவலி.. ஒரே நாளில் வீட்டுக்கு போன 5000 ஊழியர்கள் ஓய்வு! ஆட்டம் காணும் அரசு துறைகள் -
நான் பார்த்துகிறேன் நண்பா.. உறுதியாக சொன்ன விஜய்.. அஜித் தாய் மறைந்த இரவு.. நடந்தது என்ன? -
பிளாக் அண்ட் ஒயிட் கோட் சூட் அணிவது இதற்காகத் தான்.. ரகசியத்தை போட்டு உடைத்த விஜய்! -
காலியான ராஜ்யசபா எம்பி பதவி! இன்று வேட்புமனு தாக்கல் தொடக்கம்! தவெகவின் முதல் எம்பி யார்?












Click it and Unblock the Notifications