காப்பி அடித்ததை ஆசிரியை கண்டித்ததால் 2 மாணவிகள் தற்கொலை

Subscribe to Oneindia Tamil

கோயம்புத்தூர்:

பரீட்சையின்போது காப்பி அடித்ததற்காக ஆசிரியை திட்டியதால் மனமுடைந்த 2 மாணவிகள் தண்ணீர்தொட்டிக்குள் குதித்து தற்கொலை செய்து கொண்டனர்.

கோவை மாவட்டம் திருப்பூர் அருகே உள்ளது ஹங்கேரிப்பாளையம். இந்தப் பகுதியைச் சேர்ந்தவர் ராஜேஸ்வரி.பேயாம்பாளையம் பகுதியைச சேர்ந்தவர் வைதேகி.

இருவரும் 7ம் வகுப்பு படித்து வந்த தோழிகள். எப்போதும் சேர்ந்தே இருப்பார்கள். இவர்களது பள்ளியில் இறுதித்தேர்வு நடந்து வருகிறது. இதில் வைதேகி மற்றும் ராஜேஸ்வரி இருவரும் காப்பி அடித்துள்ளதாகத் தெரிகிறது.

இதையடுத்து அவர்களை ஆசிரியை கண்டித்துள்ளார். மற்ற மாணவிகள் முன்பு தங்களை ஆசிரியை திட்டியதால்அவமானத்தில் கூனிக் குறுகிய இருவரும் மனமுடைந்தனர்.

மதிய உணவு இடைவேளையின்போது பள்ளிக்கு எதிரே இருந்த ஒரு தண்ணீர் தொட்டிக்குள் குதித்தனர். இதில்நீரில் ழுகி இறந்தனர்.

இத்தகவல் போலீஸாருக்குத் தெரிந்து அவர்கள் விரைந்து வந்து பிணங்களை மீட்டனர். தங்களுக்குவாழப்பிடிக்கவில்லை என்று மாணவிகள் எழுதி வைத்திருந்த கடிதம் ஒன்றும் மீட்கப்பட்டது.

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+